அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

ஆதரவாளர்களை உஷார் மடையராக்குவதில் மு.கா.வுக்கு நிகர் எதுவும் இல்லை; ராஜினாமா செய்யவே மாட்டார்கள்!


SLMC Logo

கரையோர மாவட்டக் கச்சேரி கேட்டு நின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகச்சிறிய தேவையான மேலதிக அரசாங்க அதிபரையும், தமது கட்சியினருக்கு பதவிகளும் கேட்டு, ஒரு மாத காலத்துள் இவை நிறைவேற்றப்படா விட்டால் அமைச்சுப்பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக் கூறியிருப்பது வெறும் வாய்ச்சவாடலே தவிர அரசு இந்த சாதாரண நிபந்தனைகளைக் கூட நிறைவேற்றப் போவதுமில்லை.இவர்கள் ராஜினாமா செய்யப்போவதுமில்லை என்பதை ஒரு சவாலாகவே கூறுகிறோம் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது;
இந்த நாட்டின் அரசியல் கட்சிகளில் மிகவும் பகிடித்தனமான அரசியல் செய்வது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டும்தான்.
விட்டமின் இல்லாமல் தமது ஆதரவாளர்கள் சோபை இழக்கும் போது இவ்வாறான வார்த்தைகளை கூறி அவர்களை உஷார் மடையர்களாக்குவதில் மு.காவுக்கு நிகர் இல்லை என்றே கூறலாம்.
அப்பட்டமான சுயநலன்களை மட்டுமே கருத்திற் கொண்ட உறுப்பினர்களைக் கொண்ட இக்கட்சி 2010ம் ஆண்டு ஐ தே க.வில் போட்டியிட்டு சில பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்ற பின் அக்கட்சிக்கு துரோகமிழைத்து விட்டு அரசுடன் இணையும் போது சமூகம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகள் எதைப் பற்றியும் பேச்சுவார்த்தை செய்யாமல் பதவிகள் மட்டும் தந்தால் போதுமென அடிமை நிலையில் அரசுடன் சேர்ந்தார்கள்.
அத்தோடு நிற்காமல் வெட்கங்கெட்ட தனமாய் 18வது திருத்தத்துக்கும் ஆதரவளித்து விட்டு பெரியதொரு தவறை செய்து விட்டோம் என தலைவர் தேர்தல் மேடைகளில் புலம்பினார்.
அதே போல்  கிழக்கு மாகாண சபை தேர்தலில் வீறாப்பு பேசி விட்டு அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்பட்டு அரசுக்கு முட்டுக் கொடுத்தவர்கள் மீண்டும் புதிதாக ஞானம் வந்தவர்கள் போல் அரசுக்கு புதிய நிபந்தனைகளை விதித்து ஒரு மாத காலக்கெடுவும் விதித்துள்ளமை இந்த ஆண்டின் முதலாவது நகைச்சுவையாகும்.
அரசுடன் இணையும் போது சமூகம் பற்றி அக்கறை இல்லாமல் பதவிகளுக்கு அடிமையாகி இணைந்து விட்டு இப்போது நிபந்தனைகள் இடுவதும் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்வதாக அச்சுறுத்துவதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வழமையான ஏமாற்று அரசியலாகும்.
அதன் ஆதரவாளர்களும் உஷாரடைந்து அல்லாஹு அக்பர் என கோஷம் போடுவதும் பின்னர் ஏமாந்து தலைவர்களை ஏசித்திரிவதும் புளித்துப்போன ஒன்றாகும்.
மௌலவி ஆசிரிய நியமனம்!
இந்த நாட்டின் வரலாற்றில் 2005ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலமா கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவாக களமிறங்கு முன் மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை பேசி அதனை ஏற்றுக் கொள்ள வைத்ததோடு அதனை பெற்றுக் கொடுத்தும் சாதனை படைத்தது.
அதுவும் எமக்கு பாராளுமன்ற உறுப்பினர் அல்லது ஒரு பிரதேச சபை உறுப்பினர் கூட இல்லாத நிலையில் நாம் ஹெல உறுமய போன்ற இனவாத கட்சிகளுடன் போராடி இதில் வெற்றி பெற்றோம்.
மு. கா ஸ்தாபக தலைவர் அமைச்சர் அஷ்ரபால் கூட முடியாது போன இதனை நாம் செய்தும் இதற்கு நன்றிக்கடன் செலுத்த இந்த சமூகமோ, மௌலவிமாரோ முன்வராத போதும் சமூகத்துக்காக துணிச்சலுடன் தொடர்ந்தும் நாம் இஸ்லாமிய அரசியல் செய்து வருகிறோம்.
சமூக அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றி எம்மைப் பார்த்தாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் ஆதரவாளர்களும் பாடம் படிக்க வேண்டும்.
அதை விடுத்து இவ்வாறு தமது பழைய கோரிக்கைகளை கைவிடுவதும் பின் சின்னச்சின்ன நிபந்தனைகளை இடுவதும், ராஜினாமா செய்வோம் என கொக்கரிப்பதும் பின்னர் இரகசியமாக ஏதாவது பதவியை பெற்றுக் கொண்டு, அரசு நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளது என்று சொல்லி மக்களை சமூகத்தை ஏமாற்றுவதும் தான் இக்கட்சியின் தொழிலாகும்.
எம்மைப் பொறுத்தவரை சுயநலவாத ஏமாற்றுக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் அதாவுள்ளா கட்சியையும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் தூக்கி வீசாத வரை அவர்களால் தமது சுயநல அரசியல் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு சமூக அரசியலை நோக்கி நடைபோட முடியாது என்பதை உறுதிபட கூறுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter