மு.கா.நிர்வாகத்தின் கீழ் உள்ள சபையில் மு.கா. எம்.பி.க்கள் இருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றம்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிந்தவூரைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஹசன் அலி மற்றும் பைசால் காசிம் ஆகிய இருவருக்கும் எதிராக நிந்தவூர் பிரதேச சபையில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று வியாழக்கிழமை அதன் தவிசாளர் ஏ.எல்.ஏ.தாஹிர் தலைமையில் நடைபெற்ற போதே இவர்கள் இருவருக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக