அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 11 டிசம்பர், 2012

பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேரணையைக் கண்டித்து தலைநகரில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்!


பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக அரசாங்கம் கொண்டு வந்துள்ள குற்றப் பிரேரணையைக் கண்டித்து கொழும்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பதாதைகளை ஏந்தியபடியும் கோஷமிட்டபடியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளை மீறி அரசாங்கம் பிரதம நீதியரசர் சிராணியை பதவி இறக்க முயல்கிறது என இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.
நாட்டை மென்மேலும் இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரவே நீதித்துறையின் சுதந்திரத்தை அரசாங்கம் ஒடுக்க முயல்கிறது என இலங்கை கத்தோலிக்க மன்றத்தைச் சேர்ந்த அருட்தந்தை சத்தியவேல் தெரிவித்தார்.
ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் செயல்படுவதற்கு தடைபோட வேண்டாம் என ஜனாதிபதி கூறுவது ஏற்புடையதல்ல, ஏனெனில் ஊழல் பேர்வழிகள் பலர் அரசாங்கத்துக்குள்தான் இருக்கின்றனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டம் காரணமாக வாகனப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.
இதன்போது பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter