
கோதுமை மாவின் விலையை அதிகரித்த கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதியோ அல்லது அங்கீகாரமோ மா உற்பத்திக் கம்பனிகளுக்கு வழங்கப்படவில்லையெனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் கூறினார்.
'கோதுமை மா உற்பத்திக் கம்பனிகள் தங்களுடைய விருப்பத்திற்கமைய மாவின் விலையை அதிகரிக்கமுடியாது, எவ்வாறாயினும் பிரிமா மற்றும் செரென்டிப் கம்பனிகள் அறிவிப்பின் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மா விலையை அதிகரித்துள்ளது. ஆகையால் இக்கம்பனிகளுக்கு எதிராக இன்று சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்' என அவர் கூறினார்.
இக்கம்பனிகள் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கான வேண்டுகோளை முன்வைக்கவில்லையெனவும் அவர் கூறினார்.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 2 ரூபாவால் நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார்.
(ஜயந்த சமரக்கோன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக