ஹொங்கொங் படகு விபத்தில் 36 பேர் பலி
வாணவேடிக்கையை பார்வையிடுவதற்காக சுமார் 120 பேரை ஏற்றிச்சென்ற படகுகளிலொன்று நேற்று திங்கட்கிழமை இரவு லமா தீவுக்கருகில் விபத்திற்குள்ளானதைத் தொடர்ந்து படகின் அரைவாசிப்பகுதி நீரில் மூழ்கத் தொடங்கியதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
28 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். சுமார் 100 பேர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் 8 பேர் பின்னர் உயிரிழந்ததாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மீட்பு நடவடிக்கைகள் விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் கடலில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட 100 பேர் 5 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் இவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையிலுள்ளதாகவும் ஹொங் கொங் அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சீனாவின் தேசிய தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், ஹொங் கொங்கின் கடல்வழியில் வழமையை விட போக்குவரத்து அதிகமாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக