அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

நிந்தவூர் பிரதேச சபையின் அவசர கவனத்திற்கு...!

நிந்தவூர் பிரதேச சபையின் அவசர கவனத்திற்கு...! 
சுலைமான் றாபி

சமூகத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பொறுப்புக்கள் உள்ளன. அந்தப் பொறுப்புக்களை அவரவர்கள் செவ்வனே நிறைவேற்றும் போதுதான் அல்லல்படும் மக்களின் அவலங்களைக் குறைக்க முடியும். அந்த வகையில் நிந்தவூர் இரண்டாம் குறுக்குத்தெரு வீதியில் காணப்படும் ஜேர்மன் நட்புறவு பாடசாலைக்கு முன்னாள் அமைந்துள்ள அரசடித் தோட்டத்தையும் , அட்டப்பள்ளத்தையும் இணைக்கும் பாலமாகும். இந்த பாலம் சுனாமிக்குப் பின்னர் புனரமைப்பு செய்யப்பட்டாலும் தற்போது போதிய பாதுகாப்பு வசதியின்றி அது காணப்படுகிறது. இதனால் அன்றாடம் பயணம் செய்யும் பிரயாணிகள் மனப்பயங்களுடன் பயணிப்பதனை வெகுவாக அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் இந்த பாலத்தினூடாக பயணிக்கும் துவிச்சக்கர வண்டி, மோட்டார்  சைக்கிள், மோட்டார் வாகனம் மற்றும் கனரக வாகனங்களை தங்கள் உயிர்களை கேள்விக்குறியாக்கிய நிலைகளிலே இந்த பாலத்தினூடாக பயணிக்கின்றனர். 

மேலும் அதே போன்று 08அடி தாழ்வாக காணப்படும் இந்த பாலத்தின் கீழ்பகுதியூடாக வெள்ள நேரங்களில் அதிகமான நீர்கள் கடலுக்குச்செல்கின்றனது. மேலும் இந்தப்பாலத்தின் அருகில் தேசிய நீர்வழங்கல் வாடிகாலமைப்புச்சபையின் நீர்க்குழாய்களும்   செல்கின்றன. எனவே, இவை அனைத்திற்கும் தேவையான (Hand Rails மற்றும் Up Rights ) போன்றவைகள் இல்லாமல் உயிர்களுக்கும், வாகனங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது. மேலும் இந்த வீதியினூடாகவும், பாலத்தினூடாகவும் இரவுவேளைகளில் பயணிப்பதற்கு மின்சார வசதியின்றும்  இதன் அவல நிலை காணப்படுகிறது. 

சனி, 19 ஏப்ரல், 2014

கல்முனைப் பிராந்திய வைத்தியசாலைகளுக்கு அன்பியுலன்ஸ் வண்டிகள் உட்பட ரூபாய் 2 கோடி பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு. -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-

கல்முனைப் பிராந்திய வைத்தியசாலைகளுக்கு
    அன்பியுலன்ஸ் வண்டிகள் உட்பட ரூபாய் 2 கோடி                                              பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு.
                -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-
             ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கல்முனைப் பிராந்திய வைத்தியசாலைகளுக்கு ஒரு கோடியே 60 இலட்சம் பெறுமதியான அன்பியுலன்ஸ் வண்டிகளும், 45 இலட்சம் பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு இன்று கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம் பெற்றது.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

வியாழன், 10 ஏப்ரல், 2014

வீரமுனை கிராம மக்களுக்கான ஒன்று கூடலும், நடமாடும் சேவையும். -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-


                 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
மஹிந்த சிந்தனையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' எனும் தொனிப் பொருளில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும்' நேற்று வீரமுனை, சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதாரம்,சுதேச வைத்தியம், மற்றும்  சமூகசேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

உடங்கா கிராம மக்களுக்கான ஒன்று கூடலும், நடமாடும் சேவையும். -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-

             ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடங்கா கிராம மக்களின் கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும், உபகாரங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று உடங்கா கிராமத்தில் இடம் பெற்றது.

உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதாரம்,சுதேச வைத்தியம், மற்றும்  சமூகசேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும்; பிரதேச சபை உதவித் தவிசாளர் ஏ.கே.எம்.றகுமான், பிரதேச சபை உறுப்பினர் ஏ.றியால் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி.ஏ.எல்.சஃபீர், பொது மக்கள் தொடர்பு அதிகாரி யூ.எல்.எம்.பஸீர்,இணைப்புச் செயலாளர் ஏ.எம்.தபீக், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்ஹம்சார், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹுசைன், கணக்காளர் ஏ.எல்.மஃறூப் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிந்தவூர் பிரதேச மக்களுக்கான ஒன்று கூடலும், நடமாடும் சேவையும். -பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் பிரதம அதிதி-

             ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் பிரதேச மக்களின் 'கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும், உபகாரங்கள் வழங்கும் நிகழ்வும்' இன்று நிந்தவூர் அறபா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யூ. அப்துல் ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும்; பிரதேச சபை உதவித் தவிசாளர்  ஆர்.திரவியராஜ், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிகார், மேலதிக மாவட்டப் பதிவாளர் இஸட்.நசுறுதீன், தலைமைப்பீட சமூர்த்தி முகாமையாளர் எம்.அச்சி முகம்மட், நிந்தவூர் ஆயுர்வேத மாவட்ட வைத்திய அதிகாரி கே.எல்.எம்.நக்பர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்பிரதேச மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இனங்காணப்பட்டு, உடனுக்குடன் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதே வேளை தழிழ் சமூர்த்திப் பயனாளிகளுக்கு சித்திரைப் புத்தாண்டுச் செலவுக்கான நன்கொடைப்பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

சனி, 5 ஏப்ரல், 2014

சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும், சுயதொழில் ஊக்குவிப்பு நன்கொடை வழங்கலும்.

                 -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-
              ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள சிரேஷ்ட பிரஜைகளைக் கௌரவிப்பதோடு, சமூர்த்திப் பயனாளிகளுக்கு சுயதொழிலுக்கான மாணியம் வழங்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.
சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூகசேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான யூ.எல்.எம்.பஸீர், ஏ.எம்.தபீக், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்ஹம்சார், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹுசைன், கணக்காளர் ஏ.எல்.மஃறூப் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

site counter