அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி நிந்தவூர் பெண்கள் பிரிவின் முன்மாதிரி நிகழ்ச்சி


கல்வி அமைச்சினால் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள புதிய கல்வி ஆண்டில் முதலாம் நாள் பாடசாலை ஆரம்பிக்கும் போது கற்றலுக்கு ஏற்ற விதத்தில் பாடசாலையை தயார் செய்தல் எனும் சுற்று நிறுபத்துக்கு அமைய இலங்கை ஜமாஅதே இஸ்லாமி நிந்தவூர் பெண்கள் பிரிவினரால் தனது சமூக சேவை பகுதியின் ஓர் அங்கமாக இந்த வேலைத்திட்டத்தை நிந்தவூரில் முதலாவதாக 29.12.2013 ஞாயிற்றுக்கிழமை காலை தனது பெண்கள் பிரிவின் நிந்தவூர் ஊழியர்கள், பெற்றார்> ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்போடு நிந்தவூர் இமாம் ஹஸ்ஸாலி வித்தியாலயத்தில் முலுமையான சிரமதான நிகழ்ச்சி ஒன்றை நடாத்தியது.

இந்த சிரமதான நிகழ்வு சம்பந்தமாக பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்த நன்றி நவிழல் நிகழ்வில் பெண்கள் பிரிவின் இந்த செயற்பாடு சமூகத்துக்கு முன்மாதிரி மிக்க வழிகாட்டல் எனவும் இவ்வாரான செயற்பாடுகளை தொடர்ந்து ஏற்பாடு செய்து நடாத்த வேண்டும் எனவும் தெரிவித்து தங்களது நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
தகவல்: எம்.ஜ.எம் றாபித்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter