அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 8 நவம்பர், 2013

நிந்தவூர் அல்-மதீனா ம.வி ஆசிரியைகளின் பிரச்சினைக்குத் தீர்வு. பிரதிக்கல்விப் பணிப்பாளர் முக்தாரிற்கு ஆசிரியர்கள்,பெற்றோர்கள் பாராட்டு!

( சௌத்துல் உம்மத் )

நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் கடந்த 2013.11.30;ந் திகதி இரு ஆசிரியைகளுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையும், அதன் பின்னரான குழப்பங்களும் இன்றுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இதனை மிகச் சாதுரியமாக கையாண்டு, இரு ஆசிரியைகளையும் ஒற்றுமைப்படுத்தி, சலாம் சொல்ல வைத்த கல்முனைக் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரிற்கு நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலய ஆசிரியர்களும், பெற்றோர்களும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.


இது பற்றி மேலும் தெரிய வருவதாவது:
நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலய எல்லைக்குள் கிழக்குத் திசையில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட அல்-அதான் வித்தியாலயம் இயங்கி வருகிறது. ஒரே எல்லைக்குள் இரு பாடசாலை நிருவாகங்கள் ஆட்சி புரிகின்றன.

அல்-அதான் வித்தியாலய ஆசிரியை திருமதி .ஜெஸீமா சஹீட் என்பவரின் இரு குழந்தைகள் ( பாத்திமா நஜாபா, பாத்திமா நஜீதா) இவர்கள் மதீனா மகா வித்தியாலயத்தில் 3சீயில் கற்கின்றனர். இந்த இரு சிறுசுகளையும் வகுப்பாசிரியரான திருமதி.றிபாயா நசீர் என்பவர் நடனக்குழு போட்டி ஒன்றிற்காகத் தயார் படுத்தியுள்ளார்.

பின்னர் இந்த றிபாயா ஆசிரியர் விடுமுறையில் நின்ற போது, பக்கத்து வகுப்பாசிரியரான திருமதி.ஜுனைதா சரீப் என்பவர் குறிப்பிட்ட போட்டி நிகழ்ச்சியிலிருந்து நஜாபா,நஜிதா ஆகிய இரு மாணவர்களையும் போட்டியில் இருந்து விலக்கியுள்ளார். இதனால் பாதிப்படைந்த பிஞ்சுள்ளங்கள் அழுது கொண்டு தன்தாயிடம் வந்த 'எங்கள் இருவரையும் ஜுனைதா டீச்சர் நிகழ்சியிலிருந்து விலக்கி விட்டார்' எனக் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமுற்ற அதான் வித்தியாலய ஆசிரியை ஜெஸீமா மதீனா வித்தியாலய ஆசிரியை ஜுனைதாவிடம் வந்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். வாய்த்தர்க்கம் மட்டுந்தான். வேறு ஒன்றும் நடைபெறவில்லை.ஆனாலும், இதனைச் சமாளிக்கத் தெரியாதவர்கள் ( ஒரு பக்கச் சார்பான உயர் பதவி வகிப்பவர்களால்) விடயம் இரு ஆசிரியைகளின் வீடுகளிலும் மூட்டப்பட்டு, சம்மாந்துறைப் பொலிஸ் நிலையம், மத்தியஸ்தர் சபை வரை சென்றுள்ளது. எதிர்வரும் 2013.11.10ந் திகதி மத்தியஸ்தர் சபை விசாரணைக்கு இவ்விரு ஆசிரியர்களும் முகம்கொடுக்க வேண்டியுள்ளது.

இதே வேளை இரு குழந்தைகளின் தாயாரான ஜெஸீமா ஆசிரியை தனது குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்பிரச்சினைகளை கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் கவனத்திற்கு 2013.11.04ந் திகதி கொண்டு சென்றுள்ளார்.

உடன் இதனை விசாரிப்பதற்காக கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் நிந்தவூர் அல்- மதீனா, அல்-அதான் வித்தியாலயங்களுக்குச் சென்று, இரு அதிபர்கள் முன்னிலையிலும், இரு ஆசிரியைகளையும் மிகச் சாதுரியமாக விசாரித்து, பிரச்சினைகள் மேலோங்கிச் செலலாமல் இரு ஆசிரியைகளின் கணவன்மார், பொலிஸ் உயரதிகாரிகள் போன்றவர்களுடன் தொலைபேசிகளில் தொடர்பு கொண்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தார். இரு ஆசிரியைகளையும் கரம்பற்றி சலாம் சொல்லவும் வைத்தார்.

மதீனா வித்தியாலயத்தில் அதிபர்,பிரதி அதிபர். உதவி அதிபர்கள் உட்பட ( கல்வி சார், சாரா ) மொத்தம் 72 பேரும், அதான் வித்தியாலயத்தில் அதிபருடன் மொத்தம் 18 பேருமாக எல்லாம் 90 பேர் கொண்ட கல்விச் சமூகத்தால் ஒரு வார காலமாகத் தீர்த்து வைக்க முடியாமல் நீதிமன்றஞ் செல்லவிருந்த பிரச்சினையை ஒரே நாளில், ஒரு தனி மனிதனாய் நின்று, மிகச் சுலபமாகத் தீர்த்து வைத்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரின்  புத்தி சாதுரியத்தையும், நேர்மைத் திறனையும் கண்டு வியந்த மதீனா, அதான் வித்தியாலய ஆசிரியர்களும், பெற்றோர்களும் தமது பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளரான ஏ.எல்.எம்.முக்தார் ஒரு ஆசிரியராக முதல் நியமனம் பெற்றுப் புகுந்த முதற் பாடசாலை நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயமாகும். இதிலும் மதீனா வித்தியாலயம் பெருமை கொள்வதாக ஆசிரிய குழாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






To ntrinfor:
Rafeek firthous

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter