அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 13 நவம்பர், 2013

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் நிந்தவூர் பிரதேச பாடசாலை மாணவர்களிடத்தில் பசும் பால் அருந்துவதை ஊக்குவிக்கும் நிகழ்வு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ்> பாடசாலை மாணவர்களிடத்தில் பசும்பால் அருந்துவதை ஊக்குவிக்கம் நிகழ்வு நேற்று நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வித்தியாலய பதில் அதிபர் எம்.அச்சி முஹம்மட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹீர்> நிந்தவூர் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி ஏ.தையூபா ஆகியோரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் அதிதிகளால்  சுமார் 1000 பாடசாலைச் சிறுவர்களுக்கு> சூடாக்கிய பசும் பால் வினியோகிக்கப்பட்டது.
  
மேலும் பாலைச் சூடாக்குவதற்கான நவீன இயந்திரமொன்றும் கால் நடை வைத்திய அதிகாரி ஏ.தையூபா அவர்களினால் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது.


டாக்டர் ஏ.தையூபா  இங்கு கருத்துத் தெரிவிக்கையில்  'இரசாயனம் கலந்த பால் மாவின் மூலம் பெறப்படும் நஞ்சூட்டப்பட்ட பாலைத் தவிர்த்து> இயற்கையாகக் கிடைக்கும் தூய பசும் பாலை அருந்துவதன் மூலம் ஆரோக்கியமான குழந்தையையும்> சிறந்த சமூகத்தையும்> பொருளாதார அபிவிருத்தியையும் எய்த முடியுமென்பதே நமது ஜனாதிபதியின் நோக்கமாகும். இதனை அடைவதற்கு தேசப்பற்றுள்ள நாமனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.' எனத் தெரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter