அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 6 ஜூன், 2013

உலக சுற்றாடல் தினம் நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியிலும் சிறப்பாக இடம் பெற்றது. பிரதம அதிதியாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரி எம்.ஐ.இஷாக்.

உலக சுற்றாடல் தினம்
நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியிலும் சிறப்பாக இடம் பெற்றது.
பிரதம அதிதியாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரி எம்.ஐ.இஷாக்.

           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)

உலக சுற்றாடல் தினம் இன்று (05) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய கல்லூரியிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கல்லூரி அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சிரேஷ்ட சுற்றாடல் அதிகாரி மௌலவி.எம்.ஐ.இஷாக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வுகளில் நிந்தவூர்க் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம், பிரதேச சுற்றாடல் அதிகாரி அலி ஹசன், வலய சுற்றாடல் அதிகாரியும்,அம்பாரை மாவட்ட சுற்றாடல் முன்னேற்ற ஆலோசகருமான எம்.ரி.நௌபல் அலி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'சிந்தி, உணவருந்து, சேமி' எனும் இவ்வருட சுற்றாடல் தின மகுட வாசகத்தின் கீழ் மாணவர்கள் எவ்வாறு சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டும்? அவ்வாறு பாதுகாப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன?, பாதுகாக்கா விட்டால் நாமனைவரும் அடையும் துன்பங்கள் என்ன? பிறருக்குத் துன்பம் ஏற்படாமல் எவ்வாறு சுற்றாடலைப் பாதுகாக்கலாம் போன்ற பல விதமான ஆலோசனைகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

இறுதியில் ' சுற்றாடலைப் பாதுகாப்போம்.சுகமாக வாழ்வோம்' எனும் தொனிப் பொருளிலான மாணவ,ஆசிரிய ஊர்வலம் ஒன்றும் இடம் பெற்றது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter