அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 29 மே, 2013

நிந்தவூர் அல்-அஷ்றக் மைதானத்தில் கல்முனை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள். -கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிறல் மொஹான் விஜயவிக்கிரம பிரதம அதிதி.-

நிந்தவூர் அல்-அஷ்றக் மைதானத்தில்
கல்முனை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள்.
-கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிறல் மொஹான் விஜயவிக்கிரம பிரதம அதிதி.-

      ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கல்முனைக் கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளும், பரிசளிப்பு விழாவும் நாளை 30ந் திகதி நிந்தவூர் அல்- அஷ்றக் தேசியக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிறல் மொஹான் விஜயவிக்கிரம பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மேலும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் புஸ்பகுமார, மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் என்று நிந்தவூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.

செவ்வாய், 28 மே, 2013

இலங்கைக்கான அமெரிக்க நிலையத்தின் ஊடகத் துறை அதிகாரிகளுக்கும், அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்குமான சந்திப்பு.

இலங்கைக்கான அமெரிக்க நிலையத்தின் ஊடகத் துறை அதிகாரிகளுக்கும், அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்குமான சந்திப்பு.
            (ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
இலங்கைக்கான அமெரி;க்க நிலையத்தின் தகவல் ஊடகத்துறை அதிகாரிகளுக்கும், அம்பாரை மாவட்ட உள்ளுர் இணையத்தள ஊடகவியலாளர்களுக்குமான சந்திப்பொன்று அண்மையில் சாய்ந்தமருது சீ பிறீஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.
'உள்ளுர் இணையத்தள ஊடகவியலாளர்களின் சமூகத் தொடர்பாடல்களும், அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களும்' பற்றி இச்சந்திப்பின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கான அமெரிக்க நிலையத்தின் தகவல்.ஊடகத்துறை அதிகாரி கிறிஸ்தோபர் டீல், அமெரிக்க நிலைய தகவல் வள அதிகாரி லிண்டா பாக்கர், தகவல் வெளிக்கள அதிகாரி சாமினி சின்னையா ஆகியோருடன், அம்பாரை மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், உள்ளுர் இணையத்தள ஊடகவியலாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
உள்ளுர் இணையத்தள ஊடகவியலாளர்கள், மற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளும், சவால்களும் பற்றி விரிவாக ஆராயப்பட்டதன் இறுதியில் இங்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்க நிலையத்தின் தகவல், ஊடகத்துறை அதிகாரி கிறிஸ்தோபர் டீல் ' ஒவ்வொரு மாகாணங்களிலுமுள்ள ஊடகவியலாளர்களுக்குத் தேவையான நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சிகளை நாம் வழங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றும், இப்பயிற்சி நெறிகளில் திறமை காட்டும் ஊடகவியலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சி வழங்கவும் யோசித்துள்ளோம்' எனவும் தெரிவித்தார்.

ஆசிரிய சேவையில் 35 வருடங்கள் அளப்பெரிய சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற திருமதி. சுபைறா அலியாரிற்கு நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயத்தின் பிரதியதிபர் எம்.எச்.எம்.அப்துல் பதீயூ பரிசு வழங்கி கௌரவிப்பு

ஆசிரிய சேவையில் 35 வருடங்கள் அளப்பெரிய சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற திருமதி. சுபைறா அலியாரிற்கு நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயத்தின் பிரதியதிபர் எம்.எச்.எம்.அப்துல் பதீயூ பரிசு  வழங்கி கௌரவிப்பு

ஆசிரிய சேவையில் 35 வருடங்கள் அளப்பெரிய சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற திருமதி. சுபைறா அலியாரிற்கு தனது சேவைக் காலத்தின் இறுதி நாளில் மாணவர்களால் நடாத்தப்பட்ட சேவை நலன் பாராட்டு விழாவில் (23.05.2013) பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயத்தின் பிரதியதிபர் எம்.எச்.எம்.அப்துல் பதீயூ திருமதி. சுபைறா அலியாரிற்கு பரிசு  வழங்கி கௌரவிப்பதனைப் படத்தில் காண்க.
( படம்: ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

இளைஞர் பாராளுமன்ற தகவல் மற்றும் ஊடகத் துறை அமைச்சருக்கு நிந்தவூரில் பெருவரவேற்பு.

இளைஞர் பாராளுமன்ற தகவல் மற்றும் ஊடகத் துறை அமைச்சருக்கு நிந்தவூரில் பெருவரவேற்பு.
       ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூரிலிருந்து இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட சுலைமான் முகம்மட் ஸாபி வியாழனன்று இளைஞர் பாராளுமன்றத்தின் தகவல் மற்றும் ஊடகத் துறை அமைச்சராகச் சத்தியப்பிரமானஞ் செய்து கொண்டார்.
இளைஞர் பாராளுமன்றத்தின் அமைச்சராகச் சத்தியப்பிரமானஞ் செய்து கொண்டு கடந்த (24) அன்று தனது சொந்த ஊரான நிந்தவூருக்கு வருகை தந்த அமைச்சர் சுலைமான் ஸாபியை நிந்தவூர் இளைஞர்களும், பொது மக்களும் மாலை அணிவித்து வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இதில் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.இஸ்மத், இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகளான எம்.ஐ.எம்.பரீட் , எம்.எம்.ஹாறூன், இமாம் கஸ்ஸாலி வித்தியாலய பதில் அதிபர் எம்.அச்சி முகம்மட் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காரைதீவு வெட்டாற்று முகப்பிலிருந்து ஆரம்பமான இவ்வூர்வலம் நிந்தவூர் பிரதேச செயலக வீதியை ஊடறுத்து,இமாம் கஸ்ஸாலி வீதிவழியாகச் சென்று மஸ்ஜிதுல் ஜன்னா பள்ளிவாசலடியில் முடிவுற்றது.
தகவல்,மற்றும் ஊடக அமைச்சர் சுலைமான் முகம்மட் ஸாபி மஸ்ஜிதுல் ஜன்னாவில் இறைவழிபாட்டில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தமது காரியாலயப் பணிகளில் ஈடுபட்டார்.

வியாழன், 23 மே, 2013

மஹிந்த சிந்தனையில் நிந்தவூர் அறபா, அட்டப்பள்ளம் அறபாத் பாலர் பாடசாலைச் சிறுவர்களுக்கு தகவல் தொடர்பாடல் பயனறிவுப் பட்டறை. - பிரதம அதிதி பியசேன எம்.பி –

மஹிந்த சிந்தனையில் நிந்தவூர் அறபா, அட்டப்பள்ளம் அறபாத் பாலர் பாடசாலைச் சிறுவர்களுக்கு தகவல் தொடர்பாடல் பயனறிவுப் பட்டறை.    
                           - பிரதம அதிதி பியசேன எம்.பி –
 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் நிந்தவூர் அறபா, அட்டப்பள்ளம் அறபாத் பாலர் பாடசாலைச் சிறுவர்களுக்கு ' மழலைகளுக்கான தகவல் தொடர்பாடல் பயனறிவுப் பட்டறை ' ஒன்று நேற்று (20.05.2013) நிந்தவூர் அறபா வித்தியாலயத்தில் நடை பெற்றது.
நிந்தவூர் நனசல அறிவகத்தின் பணிப்பாளரும், ஊடகவியலாளருமான ஏ.புஆது தலைமையில் இடம் பெற்ற இப்பயனறிவுப் பட்டறையில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், முதன்மை நிலைப் பயனறிவாளர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சுமார் 75 சிறுவ,சிறுமியர்களும் ,அவர்களது பெற்றோர்களும் ,நனசல நிருவாகிகள் பலரும் இப்பயனறிவுப் பட்டறையில் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக நடைபெற்ற இப்பயனறிவுப் பட்டறையில் கலந்து கொண்ட சகல சிறுவர்களுக்கும் பிரதம அதிதி, கௌரவ அதிதிகளால் சான்றிதழ்களும், பரிசுப் பொருட்களும் வழங்கி, கௌரவிக்கப்பட்டன.

ஞாயிறு, 19 மே, 2013

அம்பாறை மாவட்டத்தில் (சா.த) சித்தியடையாத இளைஞர்களுக்கான விழிப்பூட்டல் செயலமர்வுகள் - இம்மாத இறுதியில் இடம்பெறும்

(ஏ.எல். நிப்றாஸ்)
க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடையத் தவறிய மற்றும் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகளை தொழிற்பயிற்சி கற்கைளுக்கு இணைத்துக் கொள்வதற்கான விழிப்பூட்டல் செயமர்வுகள் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளன. இளைஞர் விவகாரம் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழியங்கும் இலங்கை மனித வள அபிவிருத்தி மன்றம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இம்மாவட்டத்திலுள்ள தமிழ் மொழிமூல இளைஞர் யுவதிகளுக்கான செயலமர்வு சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூhயில் இம்மாதம் 29ஆம் திகதி புதன் கிழமையும், சிங்கள மொழிமூல இளைஞர்களுக்கான செயலமர்வு அம்பாறை நகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி வியாழக்கிழமையும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
சாதாரண தரம் சித்தியடையத் தவறுகின்ற இளைஞர்கள் தமது எதிர்காலம் சூனியமாகி விடுவதாக எண்ணுகின்றனர். சமூகமும் அவர்களை பயனற்றவர்களாகவே நோக்குகின்றது. ஆனால் இவ்வாறானவர்கள் என்.வி.கியு. எனப்படும் தேசிய தொழில்சார் தகமை அப்படையில் தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை தொடர்வதன் ஊடாக ஒரு பட்டதாரிக்கு சமமான தகுதியுடன் தொழிற்சந்தைக்குள் பிரவேசிக்க முடியும் என்பதை தெளிவுபடுத்துவது அவசியமானது. அதேபோன்று, தொழிற்பயிற்சிகளை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கும் முறையான வழிகாட்டல் அவசியமாகின்றது.
எனவே இதனைக் கருத்திற்கொண்டே தேசிய மனிதவள அபிவிருத்தி மன்றமானது திறனபிவிருத்தி அமைச்சின் கீழியங்கும் ஏனைய தொழில்சார், தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து இந்த செயலமர்வுகளை பிரமாண்டமான முறையில் நடாத்தி வருகின்றது.
ஏற்கனவே திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான செயலமர்கள் நிறைவுபெற்றுவிட்ட நிலையில், அம்பாறை மாவட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்படும் இவ்விரு செயலமர்வுகளிலும் 1500 முதல் 2000 வரையான இளைஞர் யுவதிகள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, தொழில்நுட்பப் பயிற்சித் திணைக்களம், தேசிய தொழில் பயிலுனர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபை, மனிதவள அபிவிருத்தி மன்றம், கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியவற்றின் சேவைகள் மற்றும் தொழில்வாய்ப்புக்கள் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்படும்.

புதன், 15 மே, 2013

காலநிலை சீற்றத்தால் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்குச் சேதம்.

காலநிலை சீற்றத்தால் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்குச் சேதம்.
           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

வங்காள விரிகுடாக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நேற்றிரவு( 12.05.2013 நிந்தவூர்ப் பிரதேசத்தில் மழையுடன் வீசிய பெருங்காற்றினால் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையும் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது.
வைத்தியசாலையின் சிறுவர் விடுதி, பெண்கள் விடுதி போன்றவற்றின் கூரைகள் காற்றினால் சேதத்திற்குள்ளானதைத் தொடர்ந்து, அங்கிருந்த அலுமாரிகள், மருந்துப் பொருட்கள், மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றனவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட வைத்தியதிகாரி எம்.சி.எம்.மாஹீர் தெரிவித்தார்.
மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி. ஆரீப் சம்சுதீன் மேற்படி சேதங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

Visual: DEMAGE IN NTR  HOSPITAL.
Ampara Rafeek

திங்கள், 13 மே, 2013

குடல் புண் (ulcer) பற்றிய தகவல்கள்

குடல் புண் (ulcer) பற்றிய தகவல்கள்

குடல் புண் என்றால் என்ன?

நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண்

குடல் புண் எதனால் ஏற்படுகிறது?

· பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம். குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும் ,நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.

· புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் குடல் புண்ணுக்கு வழி வகுக்கின்றன.

· சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் காரணமாகவும் குடல் புண் வருகிறது.

· கலப்பட உணவு, அசுத்த குடிநீர்,மோசமான சுற்று சூழலாலும் ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobactor pylori) என்ற பாக்டீரியாவாலும் குடல் புண் ஏற்படுகிறது.

· அதிக காரம் அல்லது எண்ணையில் பொரித்த உணவு உண்பதால் வரலாம்

· கவலை மன அழுத்தம் காரனமாகவும் வயிற்றில் அதிக அமிலம் சுரந்து புண் ஏற்படலாம்

குடல் புண் எத்தனை வகைகள்?

குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1 வயிற்றில் வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் .(Gastric ulcer)

2 சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.(Duodenal ulcer)

பொதுவாக இரண்டையும் சேர்த்து பெப்டிக் அல்சர் (Peptic ulcer) என்பார்கள்

குடற்புண் இருப்பதை அறிவது எப்படி?

வயிற்றின் மேல் பகுதியில் எப்போதும் வலியிருக்கும். சாப்பிட்ட பின் இந்த வலி குறைந்தால் அது டியோடினல் அல்சர்.மாறாக வலி அதிகரித்தால் அது கேஸ்ட்ரிக் அல்சர்.வாந்தி ,குமட்டல் ,வாயுக்கோளாறு,உடல் எடை குறைதல் சாப்பிடும் விருப்பமின்மை, காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற உணர்வும் இருந்தால் குடல் புண்ணுக்கான அறிகுறி.இந்தப் அசெளகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப் படுத்தும் மருந்துகளை உட்கொள்வதன் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.

சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ் வலி காலை உணவுக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக இருக்கும்..சில நேரங்களில் அமில நீர் வாந்தியாவதும் உண்டு.

குடல் புண் வலியோடு மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம், வலி அதிகம் இல்லாவிட்டாலும் உடல் நலக்கேடு, அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம்.

ஒருநபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார். என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.சிலருக்கு இவ்வலி, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வு குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.

தேவைப்படும் டெஸ்ட் என்ன?

குடல் புண் இருப்பதாக தோன்றினால் வாய் வழியாக் குழாய் செலுத்தி செய்யப்படும் எண்டோஸ்கோப்பி பரிசோதனை மூலம் திசு மாதிரி எடுத்து (பயாப்ஸி) சோதனை செய்து அது எந்த மாதியான புண் என உறுதிப் படுத்திக்கொண்டு அதற்கேற்ற சிகிட்சை செய்வது ‘நல்லது.

குடல் புண்ணுக்கு மருத்துவம் என்ன?

அனேக மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தையும் சிபரிசு செய்கிறார்கள். தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும். அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், தூக்க மருந்துகளையும் தேவைப்பட்டால் மன அமைதி தரும் மருந்துகளையும் சாப்பிட வேண்டும். இவை தவிர, தற்காலத்தில் புரோபான்தளின், சிமிடிடின், ராணிடிடின், ·பாமாடிடின், சுரால்பேட், முதலியவும் பயன்படுகிறது, சிமிடிடின்தான் அதிகம் சிபரிசு செய்யப்படுகிறது. எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப் படிதான் சாப்பிட வேண்டும்.

மருத்துவம் செய்யாவிட்டால்?

குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல், ரத்தக் கசிவும் ஏற்படும். இதனால் , கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார், ஆஸ்ப்ரின் போன்ற வலி நிவாரணி சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ மிகவும் அபாயகரமானதாகும்.

இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து , வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும்அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்..

நாள் பட்ட அல்சர் புற்று நோயாக மாறுமா? 

சாதாரணமாக டியோடினல் அல்சர் அல்லது காஸ்ட்ரிக் அல்சர் புற்று நோயாக மாறுவதில்லை ஆனால் எச் பைலோரி கிருமிகள் நீண்ட நாட்கள் வயிற்றில் தங்கி இருந்து அழற்சி ஏற்பட்டு முற்றிய நிலையில் (Chronic Gastiritis) 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து புற்று நோயாக மாறுவது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதற்கான வாய்ப்பு அதிகம்.

செய்யக்கூடாதவை 

· புகைபிடிக்கக் கூடாது.

· மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.

· அதிகமாகச் சாப்பிடக்கூடாது.

· பட்டினி கிடக்ககூடாது.

· காரம் ,எண்ணையில் பொரித்த உணவுகள் உண்பதை குறைக்க வேண்டும்

· பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

· சாப்பிட வேண்டிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது.

· சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

· இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.

· மனநிலையை தடுமாற விடக் கூடாது.

· அவசரப்படக் கூடாது.

· கவலைப்படக் கூடாது.

· மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.

· சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குள் படுக்ககூடாது

செய்ய வேண்டியவை

· குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்

· அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.

· அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும்.

· தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

· மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.

· இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும்.

· இருக்கமாக உடை அணியக் கூடாது.

· மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்திக் கொள்ளலாம்.

· மன இறுக்கத்தை விடுத்து மனமகிழ்சியோடு இருக்க வேண்டும்.

· அலுவலக வேலைகளை அங்கேயே விட்டுவிட வேண்டும்.

· சுகாதாரத்தை பேண வேண்டும்.

சாப்பிட வேண்டியவை

பொரித்த அல்லது தாளித்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. எனினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளைக் கீழே காணலாம்.

· சத்தான சரிவிகித உணவு.

· குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.

· காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

· டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.

· வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.

· மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.

· பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.

· பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

· பால் சாப்பிடுவதை யாரும் சிபரிசு செய்வதில்லை.

நிந்தவூர்க் கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

கடந்த 11 நாட்களுக்கு முன்னர் காரைதீவுக்கும், நிந்தவூருக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மூழ்கிய காரைதீவைச் சேர்ந்த 17 வயதைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை வேளையில் நிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

இதனை அவரது உறவினர் வந்து அடையாளம் கண்டுள்ளனர். காவல்துறையினர் இதனை ஊர்ஜிதம் செய்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

படம்: எம்.எச்.எம்.ஹஷீர்

அம்பாரை மாவட்ட அரசாங்க உயரதிகாரிகள்,திணைக்களத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர்க்கு இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் மூன்று நாள் செயலமர்வு.

அம்பாரை  மாவட்ட அரசாங்க உயரதிகாரிகள்,திணைக்களத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர்க்கு இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் மூன்று நாள் செயலமர்வு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அம்பாரை மாவட்டத்திலுள்ள அரசாங்க உயரதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர்க்கிடையில் இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட மூன்று நாள் செயலமர்வு வெள்ளிக்கிழமை (10.05.2013) முதல் அம்பாரை மொண்டி ஹோட்டலில் இடம் பெற்று வருகிறது.
வெள்ளிக்கிழமை (10) அம்பாரை மாவட்டத்திலுள்ள அரசாங்க அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் இப்பிரதேச ஊடகவியலாளர்களுடன் சிநேகபூர்வமாக நடந்து, அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு ஊடகவியலாளர்களை எவ்வாறு ஊக்கப்படுத்த வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
சனிக்கிழமை (11) அம்பாரை மாவட்டத்திலுள்ள தமிழ்மொழி மூல ஊடகவியலாளர்கள் ' பத்திரிகை சார் ஒழுக்கக் கோவையைப் பின்பற்றி, எவ்வாறு சிறப்புற செய்திகளை வெளியிட வேண்டும்' என்பது பற்றிய கலந்துரையாடலும், ஆலோசனைகளும் இடம் பெற்றன.
இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் முறைப்பாட்டுப் பொறுப்பதிகாரிகளான எம்.எஸ்.அமீர் ஹுஸைன், லியன் ஆராய்ச்சி ஆகியோர்களால் விரிவுரைகளும்  நிகழ்த்தப்பட்டன.
இச்செயலமர்வில் பங்கு கொண்ட அனைத்துத் தரப்பினருக்கும் சான்றிதழ்களும், பிரயாணக் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன.
நேற்று (12) அம்பாரை மாவட்டத்திலுள்ள சிங்கள மொழி மூல ஊடகவியலாளர்களுக்கு இதே தலைப்பிலான செயலமர்வு இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.

வானியல் கணிப்பை பயன்படுத்தி ரமழான் மாதம் - முஸ்லிம் கவுன்ஸில் தீர்மானம்

வானியல் கணிப்பை பயன்படுத்தி ரமழான் மாதம்

- முஸ்லிம் கவுன்ஸில் தீர்மானம்

Thinakaran

நவீன வானியல் கணிப்பை பயன்படுத்தி புனித ரமழான் மாதத்தை ஆரம்பிக்க பிரான்ஸ் முஸ்லிம் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர்.  இதன் மூலம் சுமார் 1400 ஆண்டு இஸ்லாமிய சம்பிரதாயத்தை மாற்றி நோன்பு பிடிக்கும் முதல் நாளை தீர்மானிக்க நவீன வானியல் முறை பயன்படுத்தப்பட வுள்ளது.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என பிரான்ஸ் முஸ்லிம் தலைவர்களுள் ஒருவரான அஸ்ஸதின் காசி ராய்ட்டருக்கு குறிப்பிட்டார். ‘தற்போது பிரான்ஸிலிருக்கும் அனைத்து முஸ்லிம்களும் ஒரே நேரத்தில் ரமழானை ஆரம்பிக்க முடியும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் ரமழானை ஆரம்பிப்பதில் ஏற்படும் பிரச்சினையை தீர்க்கும் வகையில் பிரான்ஸ் முஸ்லிம் கவுன்சில் கடந்த வியாழக்கிழமை நடத்திய வாக்கெடுப்பில், பிறை பார்ப்பதற்கு நவீன வானியல் கணிப்பை பயன்படுத்த ஆதரவு கிடைத்தது. கடந்த காலங்களில் வெறுங்கண்ணால் பிறை பார்த்தே புனித ரமழான் ஆரம்பிக்கப்பட்டு வந்தது.

சீரற்ற காலநிலைகள் ஏற்படும் பட்சத்தில் சம்பிரதாய முறையை கையாள்வதால் ரமழான் மாதம் ஒருநாள் அல்லது இரு நாட்கள் பிந்தியே ஆரம்பிக்கப்படுகிறது. பழைய முறையை பயன்படுத்துவதால் பிரான்ஸ் முஸ்லிம்கள் தொழில், கல்வி விடயங்களில் சிக்கலை சந்தித்து வருகின்றனர் என பிரான்ஸ் முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் மொஹமட் முஸ்ஸாய் குறிப்பிட்டார். ‘தற்போது எல்லாம் இலகுபடுத்தப் பட்டுள்ளது என அவர் விபரித்தார்.

புதிய முடிவின்படி, நவீன வானியல் கணிப்புக்கு அமைய எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ரமழான் மாதம் ஆரம்பிக்கும் என பிரான்ஸ் முஸ்லிம் கவுன்ஸில் அறிவித்துள்ளது.

இந்த முடிவின் மூலம் முஸ்லிம்களுக்கு விடுமுறை தினத்தைக் கோர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் நவீன வானியலை பயன்படுத்தும் முதல் நாடு பிரான்ஸ் அல்ல. துருக்கி நவீன வானியல் கணிப்பை பயன்படுத்தி ரமழான் மாதத்தை ஆரம்பிக்கும் முறையை ஒரு தசாப்தத்திற்கு முன்னரே ஆரம்பித்தது. அதேபோன்று ஜெர்மனி, பொஸ்னிய முஸ்லிம்களும் இந்த முறையை பயன்படுத்துகின்றனர். எனினும் ரமழான் மாதத்தை ஆரம்பிப்பதில் உள்ள பிறை பார்த்தல் முறை தொடர்பில் உலகில் பெரும்பாலான முஸ்லிம்களிடம் சிக்கல் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Source : Jafna Muslim

வெள்ளி, 10 மே, 2013

தென்கிழக்குப் பல்கலைக் கழக ஊடகத்துறை மாணவர்கள் சிரேஷ்ட அறிவிப்பாளரும்,வளவாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரியுடன்.

தென்கிழக்குப் பல்கலைக் கழக ஊடகத்துறை மாணவர்கள் சிரேஷ்ட அறிவிப்பாளரும்,வளவாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரியுடன்.
            ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் ஊடகத்துறைப் பட்டப் பின் கல்விக்கான கற்கை நெறிகளில் அண்மையில் வளவாளராகக் கலந்து கொண்ட சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி மிக உற்சாகத்தோடும்,

ஹாசியமாகவும் விரிவுரைகளை நிகழ்த்தினார்.
மிக ஆர்வத்தோடு பாடங்களைக் கற்றுக் கொண்ட மாணவ,மாணவிகள்;, இறுதியில் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியோடு நின்று புகைப்படங்களும் எடுத்து;க கொண்டனர்.

வியாழன், 9 மே, 2013

அஸாத் சாலியின் கைதுக்கு எதிராக அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால்

அஸாத் சாலியின் கைதுக்கு எதிராக அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால்

Harththaalகொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியை விடுதலை செய்யக்கோரி அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.
 இதனால் வியாபார ஸ்தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன்  போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
எனினும் அரச அலுவலகங்கள், பாடசாலைகள் என்பன வழமை போல் இயங்குகின்ற போதிலும் பாடசாலை மாணவர்களின் வரவு மிகவும் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான கல்முனை, சாய்ந்தமருது, நிந்துவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுள்ளது. இதேவேளை பொத்துவில் மற்றும் இறக்காமம் ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவில்லை.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் பிரதான வீதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் வழமைபோன்று போக்குவரத்து இடம்பெறுகிறது. இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அஸாத் சாலியின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரங்கள் மூலம் வேண்டுகோள்விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Harthal

சர்வதேச வீதிப் போக்குவரத்து வாரத்தை முன்னிட்டு அம்பாரைப் பிராந்தியத்தில் 'சமாதானம், ஒற்றுமை, பாதுகாப்பு அபிவிருத்தியை நோக்கி அணி திரள்வோம்' எனும் தலைப்பிலான பொலிஸ்-உலமாக்கள் மாநாடு.

சர்வதேச வீதிப் போக்குவரத்து வாரத்தை முன்னிட்டு 
அம்பாரைப் பிராந்தியத்தில் 'சமாதானம், ஒற்றுமை, பாதுகாப்பு அபிவிருத்தியை நோக்கி அணி திரள்வோம்' எனும் தலைப்பிலான பொலிஸ்-உலமாக்கள் மாநாடு.

- சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் அஜித் றோகன பிரதம அதிதி.-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வீதிப் போக்கு வரத்து ஒழுங்குகளைக் கடைப் பிடிப்பதன் ஊடாக ' சமாதானம், ஒற்றுமை, பாதுகாப்பு அபிவிருத்தியை நோக்கி அணிதிரள்வோம்' எனும் தலைப்பிலான பொலிஸ்-உலமாக்கள் மாநாடு (06.05.2013) அன்று சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் தலைமையில் இடம் பெற்ற இம்மாநாட்டில் அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும், முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி அஜித் றோஹன பிரதம அதிதியாகவும், அம்பாரை மாவட்ட மோட்டார் போக்கு வரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி பியந்த பண்டார கௌரவ அதிதியாகவும்  கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு,சம்மாந்துறை, வீரமுனை, சொறிக்கல்முனை, வளத்தாப்பிட்டி, மல்வத்த போன்ற பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களின்  நம்பிக்கையாளர் சபையினர், இப்பிரதேசங்களில் மக்களை நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கும் உலமாப் பெருமக்கள், கடமையில் ஈடுபட்டிருக்கும் பொலிசார், மோட்டார் போக்கு வரத்துப் பொலிசார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் சட்டத்தரணி அஜித் றோஹன ' இன்று இலங்கையில் 431 பொலிஸ் நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவைகளில் மிக அதிகமான குற்றச்செயல்களும், முறைப்பாடுகளும், விபத்துக்களும் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவில் தான் இடம் பெற்றுள்ளன. இவர்களுக்கு அறிவுரைகள், அச்சுறுத்தல்கள், தண்டனைகள், நீதிமன்றத் தண்டனைகள் என வழங்கியும் மாற்றங்கள் ஏதுமில்லை. ஆனால் முஸ்லிம் மக்கள் வெள்ளிக் கிழமைகளில் அவர்களது பள்ளிவாசல் 'குத்பா' பிரசங்கங்களை நன்கு மதிப்பதும், அதன்படி நடப்பதனையும் நாமறிவோம். எனவே இங்கிருக்கும் உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகிகளின் உதவிகள் மூலம் விபத்துக்கள் அற்ற, சமாதான, அபிவிருத்திப் பூமியை நோக்கிப் பயணிக்க நாம் ஒன்றுபடுவோம்' எனக் கேட்டுக் கொண்டார்.( கடந்த கால அகோர விபத்துக் காட்சிகளும் நவீன இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் காண்பிக்கப்பட்டன).
இறுதியாக வெள்ளிக்கிழமை  குத்பா பிரசங்கங்களிலும், இரவு நேர இசாத் தொழுகையின் பின்னரும்  பள்ளிவாசல்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரை செய்வதென்றும், கடந்த காலங்களில் நடைபெற்ற விபத்துக்களின் விபரங்கள் தொகுக்கப்பட்ட காட்சிகள், பொதுமக்கள் கூடுமிடங்களில் பெரிதாகப் பார்வைக்கு வைப்பதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ்.ஏ.எம்.இஸ்மாயில், செயலாளர் அல்ஹாஜ்.ஏ.எம்.றஸீன் ஆகியோர்களினால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் அஜித் றோஹனவிற்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது.

தேசிய ரீதியில் வெற்றி பெற்ற நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்குப் பல்வேறு வழிகளில் அன்பளிப்புக்கள்.

( நிந்தவூர் தினகரன் விசேட நிருபர்) 

நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை, தேசிய ரீதியில் நடைபெற்ற உற்பத்தித் திறன் விருது போட்டியில் இரண்டாமிடம் பெற்றதைத் தொடர்ந்து இவ்வைத்தியசசாலைக்குப் பல வழிகளில் இருந்தும் பல்வேறு அன்பளிப்புக்கள் கிடைத்த வண்ணமுள்ளன.

நிந்தவூர் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.சி.எம்.மாஹீர் மூலம் வைத்தியசாலையின் பல்வேறு தேவைகளைக்  கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, எம்.சி.எம்.பைசால் காசீம் , நிந்தவூர் அமானா வங்கி முகாமையாளர்,  நிந்தவூர் ஹட்டன் நசனல் வங்கி முகாமையாளர், நிந்தவூர் மக்கள் வங்கி முகாமையாளர் போன்றோருடன் மேலும் நல்லுள்ளம் கொண்ட தனவந்தர்கள் பலரும் பல அன்பளிப்புக்களை வழங்கி வருகின்றனர்.

இ;வ்வாறானதொரு நிகழ்வு அண்மையில் (07.05.2013) நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் , வைத்தியதிகாரி எம்.சி.எம்.மாஹீர் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பற்றாக்குறையான மருந்துகள், அன்றாடப் பாவனைப் பொருட்கள், சிறிய அத்தியவசிய  உபகரணங்கள் என்பனவும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், வைத்தியசாலை அபிவிருத்திச் சபையினர், வைத்தியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
 
நிந்தவூரில் சர்வமதத் தலைவர்களுக்கான மாநாடு. -பிறிகேடியர் ஹரன் பெரேரா பிரதம அதிதியாகப் பங்கேற்பு-

நிந்தவூரில் சர்வமதத் தலைவர்களுக்கான மாநாடு.
       -பிறிகேடியர் ஹரன் பெரேரா பிரதம அதிதியாகப் பங்கேற்பு-
             ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அம்பாரை மாவட்ட சர்வமதத் தலைவர்களுக்கான மாநாடு நேற்று (07.05.2013) நிந்தவூர் மாவட்டத் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
நிந்தவூர் ஜும்ஆப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் அல்ஹாஜ்.ஏ.எம்.றஸீன் தலைமையில் இடம் பெற்ற இம்மாநாட்டில் அம்பாரைப் பிராந்திய மூன்றாவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிறிகேடியர் ஹரன் பெரேரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இம்மாநாட்டில் கல்முனை சுபத்திரா ராமய விஹாராதிபதி ரண்முத்துகல தேரர், அக்கரைப்பற்று விஹாராதிபதி தேவபொட்ட சோரத் தேரர், திருக்கோயில் கத்தோலிக்க தேவாலய அருட்தந்தை இக்னோசியஸ், கல்முனை முருகன் கோயில் பிரதம குரு சிவசிறி. க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், நிந்தவூர் தஃவா கலாசாலை அதிபர் சங்கை;ககுரிய உலமா எம்.ஏ.அமீர் அலி மௌலவி> கல்முனை சமாதானப் பேரவைத் தலைவர் கலாநிதி.எம்.ஐ.எம்.ஜெமீல்> படைப்பிரிவின் பொது மக்கள் தொடர்பதிகாரிகளான கேணல் சரத் தென்னக்கோன்> கேணல் வசந்த ஹேரத்> கேணல்.பிரியந்த கமகே> மேஜர் நவரெட்ணம் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய அம்பாரைப் பிராந்திய கட்டளைத்தளபதி பிறிகேடியர் ஹரன் பெரேரா 'நாட்டின் ஆங்காங்கே நடைபெறும் ஒரு சில விரும்பத்தகாத செயல்களை வைத்துக் கொண்டு நாம் பிழையாகச் சிந்திக்கக் கூடாது. நமது அம்பாரை மாவட்டத்தில் நாம் அமைதியைக் காத்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் முழு நாடும் சீர் பெறும். எனவே இங்கு கூடியிருக்கும் மும்மதத் தலைவர்களிடம் நான் பணிவாக வேண்டுவது> நமது அம்பாரைப் பிராந்தியத்தில் சாந்தி,சமாதானம் ஓங்க அவரவர் சமூகத்தவர்களை நல்வழிப்படுத்த முன்வர வேண்டும்.' ஏனக் கேட்டுக் கொண்டார்.
மேலும்> இங்கு உரையாற்றிய அக்கரைப்பற்று விஹாராதிபதி தேவபொட்ட சோரத் தேரர் ' முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை மிகச் சிறந்தது.ஆபாச உணர்வுகளைத் தூண்டாத மரியாதைக்குரிய ஆடையாகும். எங்கள் சமூகப் பெண்களின் ஆடைகள் கூட ஆபாசத்தை உண்டு பண்ணும் விதத்தில் அமைந்துள்ளன.எல்லாச் சமூகங்களிலும் குழப்பங்களை உண்டு பண்ணக்கூடிய சிறு சிறு குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. நேர்மையில்லாத குழப்பவாதிகளான அவர்கள் அழிந்து விடுவர்.இதற்காக நாம் சமாதானத்தைக் காப்பதிலிருந்து விலகி நிற்கக் கூடாது' எனக் கேட்டுக் கொண்டார்.

site counter