அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 6 நவம்பர், 2012

ஏலத்தில் விடப்படும் கந்தளாய் குளத்தின் மாணிக்ககல் படிமம்


கந்தளாய் குளத்தில் கிடைக்கப்பெற்றுள்ள மாணிக்ககல் படிமத்தை எலத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்காக நீர்ப்பாசன திணைக்களத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நிமல் பண்டார கூறுகின்றார்.
கந்தளாய் குளக்கரையிலிருந்து பெறப்படும் இந்த மாணிக்ககல் படிமத்தை குளத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அகற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
அத்துடன் சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளையும் இதனூடாக தடுக்க முடியுமென தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவிக்கின்றது.
குளத்திற்கு அருகில் வசிக்கும் மற்றும் அதன் நீரினை பயன்படுத்தும் மக்களுக்கு இதன்போது அதிக முன்னுரிமை வழங்கப்படும் என அதிகார சபையின் பணிப்பாளர் நிமல் பண்டார மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter