கொழும்பு – 07 இலுள்ள 120 வருடங்கள் பழமை வாய்ந்த குதிரைப் பந்தயத்திடல் பார்வையாளர் கூடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறக்கப்பட்ட தினத்தன்று பாதுகாப்பு கடமையில் சரியாக ஈடுபடாத இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையே கறுவாத் தோட்ட பொலிஸார் இன்று திங்கட்கிழமை இடைநிறுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வின் போது மோட்டார் சைக்கிள் ஒன்று மேடைக்கு அருகில் சென்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
"இதன்போது, போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த மோட்டார் பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் இருந்துள்ளனர்.
இதனால் கடமையில் அலட்சியம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்" என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. (சுபுன் டயஸ்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக