அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 4 நவம்பர், 2013

லொயிட்ஸ் ஹோட்டலில் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை நடாத்திய அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் மாநாடு.

( ஏ.எல்.ஏ.றபிக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்ட அபிவிருத்தி சம்பந்தமாகவும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் இடம் பெற்றது.

கிழக்கு மாகாண சபை அமைச்சரவைப் பேச்சாளரும், வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, அக்கரைப்பற்று மத்திய நீர்ப்பாசனப் பொறியியலாளர்
எம்.இஸட்.எம்.டபிள்யூ.இப்றாகீம், அம்பாரை மாவட்டச் செயலக பிரதித் திட்டப்பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக், கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜெஸுர், மாகாண சுகாதார பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.நஜீப், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ.எல்.ஹாஜா முகையதீன் உட்பட வீதி அபிவிருத்தி, நீர்பாசன உயரதிகாரிகள் பலரும், அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டின் ஆரம்பத்தில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் போன்ற பிரதேசங்களில் வீதி அபிவிருத்தி, நீர்பாசனத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்கள், எதிர் கொண்ட சவால்கள் பற்றி அமைச்சர் உதுமாலெவ்வையினால் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.  தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் அமைச்சர், தொடர்புடைய அதிகாரிகளினால் பதிலளிக்கப்பட்டன.

இறுதியாக கிழக்கு மாகாண சபை அமைச்சரவைத் தீர்மானங்களாக 14 தீர்மானங்களை அமைச்சர் உதுமாலெவ்வை ஊடகவியலாளர்களிடந் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் உதுமாலெவ்வை 'மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருக்கும் எமது அபிவிருத்திப்பணிகளுக்குத் தடையாக உள்ளவர் எவரையும் சட்டப்படியும்,நீதிப்படியும் அடிபணிய வைத்து விடுவோம். இருந்தாலும் நம்மவர்களுடனான சினேகபூர்வ உறவுகளுடன் சுமூகமாகத் தீர்த்துக் கொண்டு, மக்களுக்கான பணிகளை முன்னெடுப்பதையே நான் விரும்புகிறேன்.' எனத் தெரிவித்தார்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter