அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

ஹிஜாப் அணிந்த ஆசிரியைகளை அவமானப் படுத்திய கல்முனை பாடசாலை.!


Picture
கல்முனை கார்மல் பாத்திமா பாடசாலையில் இன்று இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் உடையில் சென்ற ஆசிரியையை அங்குள்ள ஏனைய மத ஆசிரியர்கள் அதிபர்கள் அனைவரும் பாடசாலை வாசலில் வைத்து மறித்து அவமானப்படுத்தி ஹிஜாப் அணிந்து இனி வர முடியாது என்று திட்டி, குறித்த ஆசிரியையை அவமானப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது.. சமீபத்தில் ஆசிரிய இடமாற்றம் காரணமாக 7 முஸ்லீம் ஆசிரியைகள் கார்மல் பாத்திமாபாடசாலைக்கு புதிதாக வந்துள்னர். இவர்கள் வழமையாக தாம் அணிகின்ற ஹிஜாபுடன் பாடசாலை செல்ல, அங்குள்ள அதிபர்க உட்பட ஆசிரியர்கள் அனைவரும் ‘எங்கள் பாடசாலையில் ஆசிரியர்களுக்கான உடை சேலை கட்டுவதுதான்’ ஆகையால் நீங்களும் அவ்வாறுதான் வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இல்லை இது எங்கள் மார்க்கம் சம்பந்த்தப்படது’ என்று குறிப்பிட்ட ஆசிரியைகள் விளக்கியும் பாடசாலை நிர்வாகம் அதை ஏற்காமல் “சேலை தான் கட்டவேண்டும்” என்று கட்டாயபடுத்தியதோடு விசாரணை என்ற பெயரில் அவமானப்படுத்தியும் உள்ளனர்.
இன்று மருதமுனையை சேர்ந்த குறித்த ஆசிரியை ஹிஜாப் உடையில் பாடசாலை சென்ற போது பெண் ஆசிரியைகள் அவரை பாடசாலை வாசலிலே வைத்து வழிமறித்து இந்த உடை போட்டு உள்ளே வரக்கூடாது என்று கூறியுள்ளனர். மேலும் பாடசாலை அதிபரும் தனிப்பட்ட விசாரணை என்ற பெயரில் குறித்த ஆசிரியையை இனி இந்த உடையில் வரகூடாது என்று நிர்பந்த்திதுள்ளார். பிரச்சனை பின் பாரிய அளவில் போய் குறித்த ஆசிரியையை அணைத்து ஆசிரியரிகளிடத்திலும் மன்னிப்பு கேட்கயும் வைத்து அவமானபடுத்தியுள்ளனர்.
சமூக நல் பிரஜைகளை உருவாகும் பாடசாலை ஒன்று இவ்வாறு கீழ்த்தரமாக நடந்துள்ளதமை கண்டிக்கத்தக்கதும் வேதனைகுரியதுமான விடையமாகும்.
இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால் கார்மல் பாத்திமா பாடசாலையில் சேலை அணியாது கிருஸ்தவ ஆசிரியைகள் அவர்களின் மத கலாசார உடையில் கற்பிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter