அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 12 டிசம்பர், 2012

21ஆம் நூற்றாண்டை அதிரவைத்த சரித்திர நிகழ்வுகள்!



-இர்ஷாத் றஹ்மத்துல்லா-
12.12.12 புதன்கிழமை இரவு 10 மணிக்கு உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டுகளில் உலகை அதிரவைத்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க பல சரித்திர நிகழ்வுகளையும் சம்பவங்களையும் அவற்றிற்கு காரணமான தலைவர்களையும் தளபதிகளையும் நமக்கு மீட்டித்தரும் ஓர் வரலாற்று ஆவணமான சரித்திரத்தை திரும்பிப்பார் என்னும் புதுமையான நிகழ்ச்சிவொன்றினை வசந்தம் தொலைக்காட்சி வழங்கவுள்ளது.
நாம் பாடப்புத்தகங்களின் மூலமும் ஊடகங்கள் மூலமும் தெரிந்து கொண்ட தகவல்களையும் கண்முன் கொண்டுவரும் முதல் உலகத்தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இது அமைகிறது. இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் புதுமைகளை படைத்துவரும் வசந்தம் தொலைக்காட்சி இதனை வழங்குகின்றது.
இந்த சிறப்பு நிகழ்ச்சியை வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப் பொறுப்பாளர் இர்பான் மொஹமட் தொகுத்து வழங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter