அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்


-நமது செய்தியாளர்-
அமெரிக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்களை தவறாக சித்தரித்து  வீடியோ ஒளி நாடா வெளியிட்டதாக கூறப்படுவதை கண்டித்து இன்று (14.9.2012) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் காத்தான்குடி தாறுல் அதர் அத்தவிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் கண்டனப் பேரணியொன்று நடைபெற்றது.
காத்தான்குடி தாருல் அதர் அத்தவிய்யா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்டனப் பேரணியில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கண்டனப் பேரணியில் ஈடுபட்டோர் சுலோகங்களை தாங்கியிருந்தனர்.
‘எமது உயிரிலும் மேலான தூதரை கேவலப்படுத்தாதே, இதை தட்டிக் கேட்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை எனும் அயோக்கிய நாடுகள் சபை எங்கே, அமெரிக்காவே முகம்து நபியை இழிவு படுத்தும் வீடியோவை உடனடியாக தடை செய், இஸ்லாத்திற்கு எதிரான வன்முறைகளை நிறுத்து, அமரிக்காவே உனது காட்டு மிராண்டித்தன்த்தை இஸ்லாத்தில் காட்டாதே போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை கண்டனப் பேரணியில் ஈடுபட்டிருந்தோர் தாங்கியிருந்தனர்.
பேரணி பள்ளிவாயல் முன்றலில் ஆரம்பித்து சற்று தூரம் வரை சென்று நிறைவு பெற்றது.
பேரணியின் இறுதியில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதாகவும் இதற்கு எதிராக சகல முஸ்லிம்களும் பிராத்திக்குமாறும் பள்ளிவாயலின் இமாம் மௌலவி அஸ்பர் பதுர்தீன் வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter