அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 18 நவம்பர், 2013

நிந்தவூரில் பலநாட்களாக கிரீஸ் மனிதனாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இறாணுவத்தினர், மக்களால் சுற்றிவலைப்பு. இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு. கலவரத்தில் காயமுற்ற நிந்தவூர் தவிசாளர் உட்பட பல பொதுமக்கள் வைத்தியசாலையில்.


நிந்தவூரில் பலநாட்களாக கிரீஸ் மனிதனாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இறாணுவத்தினர், மக்களால் சுற்றிவலைப்பு.


இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு. 

கலவரத்தில் காயமுற்ற நிந்தவூர் தவிசாளர் உட்பட பல பொதுமக்கள் வைத்தியசாலையில்.

கலவரத்தில் காயமுற்ற நிந்தவூர் தவிசாளர் உட்பட பல பொதுமக்கள் வைத்தியசாலையில்.

நிந்தவூரில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக திருட்டு மற்றும் வீடுகளுக்கு கல் எறிதல் என பொது மக்களை அச்ச நிலைக்கு உட்படுத்திக் கொண்டிருந்த குழுவினரை நேற்றிரவு 11 மணியளவில் பொது மக்கள் கடற்கரைப் பூங்காவிற்கு அருகில் மடக்கிப் பிடிக்க முற்பட்ட போது, குறிப்பிட்ட குழுவினர் பாதுகாப்பு தரப்பினர் என அடையாளம் கண்டுள்ளனர்.


இதனால் இவர்கள் பொது மக்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக வானை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை மேற்கொண்டனர்.

பொது மக்களினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளவர்களை பாதுகாத்து அங்கிருந்து கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டனர்.

மேற்படி சம்பவங்களில் ஈடுபட்ட இவர்கள் கடற்கரையில் வைத்து தங்களது சீருடையை அணிவதற்கு ஏற்கனவே அணிந்து இருந்த டீசேர்ட்டை மாற்றுவதற்கு முற்பட்ட வேளையிலேயே இவ்வாறு மக்களிடம் அகப்பட்டுள்ளார்கள். இதனால் நிந்தவூர் கடற்கரையில் ஆயிரக் கணக்கான பொது மக்கள் திரண்டதால் நிந்தவூர் பிரதேசத்தின் பல இடங்களிலும் பாதுகாப்பு தரப்பினர் நிலை கொண்டனர்.

அங்கு கூடியிருந்த ஆயிரத்திற்கும் அதிகமான ஊர்மக்களை சமாளிக்க முடியாமல் படையினர் வாணைநோக்கியும் நிலத்தை நொக்கியும் சாரமாரையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனால் இங்கிருந்த ஊர்மக்கள் இராணுவத்தினரை நோக்கி கல்மாரி வீசினர். இதன்போது 4 இராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டதாக அறியவருகிறது. 

இதன்பொது பிடிபட்ட கொள்ளையர்களை இராணுவத்தினர் பாதுகாப்பாக அங்கிருந்து எடுத்துச்சென்றுள்ளனர்.

இக்கலவரத்தில் காயமற்ற நிந்தவூர் தவிசாளர் தாஹிர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சில பொதுமக்கள் நிந்தவூ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைசெற்று வருகின்றனர்.

இச்சம்பத்தை கண்டித்தும், எடுத்துச்செல்லப்பட்ட கொள்ளளையர்களை மீண்டம் ஒப்படைக்குமாறும் கோரி தற்போது நிந்தவூர் பிரதான வீதி, வைத்தியசாலை வீதி ஆகியவற்றில் பொது மக்கள் வீதித் தடைகளை ஏற்படுத்தியுள்ளார்கள். நிந்தவூர் பிரதேசத்தின் வீதிகள் தோறும் பொது மக்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள். 










கொள்ளையர்கள் பிடிபட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொதிகள்







Like ·  · 41 minutes ago · 


1 கருத்து:

  1. இவர்கள் பாதுகாப்பு படையனர் இவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் தெரிவிக்கின்றன்.

    பதிலளிநீக்கு


site counter