அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 25 மார்ச், 2013

நிந்தவூரில் றியல் இம்றான்’ விளையாட்டுக் கழகம் உதயம்!



IMG_20130303_152901
(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
சுமார் 35 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட நிந்தவூர் இம்றான் விளையாட்டுக் கழகத்தின் தலைமைத்துவ வழிகாட்டல்கள் சீரின்மையாலும், சுயநலப்போக்குகள் அதிகரித்துள்ளமையாலும் சிரேஷ்ட விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமையாலும் இம்றான் விளையாட்டுக் கழகத்திற்குள் வெடிப்பு ஏற்பட்டுள்ளதெனத் தெரிய வருகிறது.
இதன் விளைவாக இம்றான் வி. க சிரேஷ்ட உறுப்பினர்கள் (ஆரம்பகாலத் தொண்டர்கள்) ஒன்று சேர்ந்து புதிதாக ‘ றியல் இம்றான் வி. கழகத்தை’ உதயமாக்கியுள்ளனர் என்பது அவர்களது உரையாடல்கள் மூலம் அறியக் கூடியதாக இருந்தது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நிந்தவூர்-09, மர்ஹூம். அ. அஹமட் சேர் தோட்டத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
இதன் தலைவர் எம்.ஐ.தௌபீக்(ஜே.பி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் றியல் இம்றான் விளையாட்டுக் கழக ஆலோசகரும் நிந்தவூர்ப் பிரதேச சபை எதிர்க் கட்சித் தலைவருமான வை.எல்.சுலைமாலெவ்வை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அம்பாரை பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகரும் லதான் விளையாட்டுக் கழகத் தலைவருமான எம்.எல்.றபீக் விசேட அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வை.எல்.சுலைமா லெவ்வையினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட புதிய சீருடைகள் றியல் இம்றான் வி.க. தலைவர் எம்.ஐ.தௌபீக், செயலாளர் எஸ்.எம்.ஹனீபா, செயலாளர் ஏ.நஸீர் ஆகியோர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளுக்கு இடையிடையே சிறந்த இசைமைப்புடன் கூடிய மிகப்பிரபல்யம் வாய்ந்த பாடகர்களினால் பாடல்களும் இசைக்கப்பட்டன. இதனால் அப்பிரதேசப் பெண்களும்சிறுவர்களும் இங்கு கூடியிருந்தனர்.
இறுதியில் சிறப்பானதொரு விருந்துபசாரத்துடன் மாலை 4.30க்கு இக்கூட்டமும், இசை நிகழ்சியும் முடிவுற்றது.
இந்நிகழ்வுகளில் சட்டத்தரணி. ஏ.நஸீல், துறைமுக அதிகார சபை ஊழியர்கள், இம்றான் வி.க.த்தின் தொண்மைக் கால தொண்டர்கள், உள்ளுர் அரசியல் பிரமுகர்கள், கிராம சேவை அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு இரசிகர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இவைகளை அவதானித்துக் கொண்டிருந்த பொது மக்களில் சிலர் ‘ எதிர்கால அரசியலுக்கான அத்திவாரமாக இருக்குமோ’ எனப்  பேசிக் கொண்டனர். பொறுத்திருந்துதான் பார்ப்போமே!
IMG_20130303_145716IMG_20130303_152756IMG_20130303_133603IMG_20130303_133614

அக்கரைப்பற்றில் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்ட 2 முஸ்லிம்கள் கைது




(எஸ்.ஜமால்டீன்)

இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் அநீதிகளைக் கண்டித்து அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று (25.03.2013) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன் பாடசாலைகள் அனைத்தும் இயங்கவில்லை. ஓரிரு அரச நிறுவனங்களைத் தவிர அரச, தனியார் அலுவலகங்கள் யாவும் மூடப்பட்டிருந்தன. பிரதான வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டு வீதித் தடைகள் ஏற்படுத்தப்படிருந்தன. இராணுவத்தினர் பின்னர் வீதித் தடைகளை நீக்கி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. 

இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கள - முஸ்லிம் மக்களுக்கிடையில் நிலவும் சமாதான நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்போரை சட்டத்திற்கு முன் நிறுத்து! இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான இனவாதக் கெடுபிடிகளை உடன் நிறுத்து! முஸ்லிம்களின் வாழ்வியல் கலாசார விழுமியங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்காதே! உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இவ் ஹர்த்தால் அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் உரிமைகள் அமைப்பு (எம்.ஆர்.ஓ) மற்றும் உள்ள10ர் அமைப்புக்கள் சிலவும் இதற்கான அழைப்பை விடுத்திருந்தன. 

Srce: Jafna Muslim

இலங்கைக்கு செய்மதி - இந்தியாவும், சீனாவும் கடும்போட்டி



(PP) சிறிலங்காவில் முக்கியமான துறைகளில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து இந்தியப் பாதுகாப்பு கட்டமைப்புகள் கவலை கொண்டுள்ளன. இது குறித்து ஆராயவும், இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்குப் பொருத்தமான அணுகுமுறைகளை வகுக்கவும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பணியகம், அமைச்சுக்கள் மட்டத்திலான அவசர கூட்டம் ஒன்றை இன்று ஒழுங்கு செய்துள்ளது. 

விண்வெளித் துறையில் சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கம் இந்தியாவுக்கு ஆகப் பிந்திய தலைவலியாக மாறியுள்ளது.  2015ம் ஆண்டு சிறிலங்கா நிறுவனம் ஒன்று சீனாவுடன் இணைந்து தனது முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஒன்றை ஏவத் திட்டமிட்டுள்ளது. 

இந்த விவகாரம் குறித்து கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆலோசனை நடத்தியிருந்தார்.  இதையடுத்து, சிறிலங்காவின் விண்வெளித் திட்டத்தில் இருந்து இந்தியாவைப் பாதுகாப்பதற்கான செயற்திட்டங்களை வகுத்து தருமாறு விண்வெளித்துறை திணைக்களத்தை அவர் கேட்டிருந்தார். 

சுப்ரீம் சற் என்ற சிறிலங்கா நிறுவனம் 320 மில்லியன் டொலர் செலவில் சீனாவின் அரசுத்துறை நிறுவனமான சீன கிறேட் வோல் இன்டஸ்ரி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து தொலைத்தொடர்பு செய்மதி ஒன்றை ஏவும் உடன்பாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் கையெழுத்திட்டது.  இதன் தொடர்ச்சியாக, கண்டியில் செய்மதி கட்டுப்பாட்டு நிலையத்தை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், சிறிலங்காவின் செய்மதி கட்டமைப்பு வசதிகளை சீனா தனக்கு எதிராகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தியா கருதுகிறது.  இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிப்பது குறித்த சாத்தியப்பாடுகள் தொடர்பாக இந்திய அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்தக் கூட்டத்தில் விண்வெளி திணைக்களம், தகவல் தொழில்நுட்ப அமைச்சு, தகவல், மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, மற்றும் இந்தியாவின் பல்வேறு புலனாய்வு அமைப்புகள். கலந்து கொள்ளவுள்ளன. 

இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதற்கிடையே, சீனாவின் தலையீட்டைத் தவிர்ப்பதற்கு, சிறிலங்காவுக்கு இந்தியாவே செய்மதியை உருவாக்கி, ஏவுவதற்கு உதவலாம் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ கூறியுள்ளது.  இது இரு நாடுகளுக்“கும் உதவியாக இருப்பதுடன் சீனாவின் தலையீட்டில் இருந்த தடுக்கவும் உதவும் என்று இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

செய்மதிகளை உருவாக்கி ஏவுவது மற்றும் செயற்படுத்துவதில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வது குறித்து சிறிலங்காவுடன் பேச்சுக்களை ஆரம்பிக்கலாம் என்று இந்திய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அதற்கு சிறிலங்கா மறுப்புத் தெரிவித்தால், இந்தியா, தனது அண்டை நாடான சிறிலங்காவிடம், சீனாவின் தலையீட்டை குறைக்க செய்மதியின் செயற்பரப்பை சிறிலங்காவின் கடல் மற்றும் தரை எல்லைகளுக்குள் சுருக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளும் என்று இந்தியா கோரவுள்ளது. 

அதேவேளை, இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் வர்த்தக நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த விவகாரம் குறித்து அனைத்துலக அளவில் பிரச்சினை எழுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதேவேளை, பாரிய தொலைத்தொடர்பு வலையமைப்பின் மூலம் இந்தியாவை மூலோபாய ரீதியாக சீனா சுற்றிவளைப்பதாக இந்தியப் புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன. 

சிறிலங்கா, மாலைதீவு, பங்களாதேஸ் ஆகிய நாடுகளுடன் சீனா செய்மதி இணக்கப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது புதுடெல்லியின் கவலையை அதிகப்படுத்தியுள்ளது.

Srce: Jafna Muslim

வியாழன், 21 மார்ச், 2013

கல்லடி புதிய பாலம் நாளை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படுகிறது (படங்கள்)

(பழுளுல்லாஹ் பர்ஹான்)

நாளை 22ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் மணியளவில் இலங்கையின் 3வது நீளமான மட்டக்களப்பு-கல்லடி புதிய பாலம் இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பொதுமக்கள் பாவனைக்காக வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இலங்கையின் 3வது நீளமான பாலமும், தொழிநுட்பத்தில் தெற்காசியாவின் முதலாவது பாலமாகவும் அமையும் மட்டக்களப்பு-கல்லடி புதிய பாலத்தின் வேலைகள் முடிந்த வண்ணம் காணப்படுகின்றன.

குறித்த பாலம் திறந்து வைக்கப்படுவதனால் இதுவரையில் மட்டக்களப்பு மக்கள் எதிர்நோக்கி வந்த போக்குவரத்து நெரிசல் இல்லாது போய் போக்குவரத்து இலேசாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.







புதன், 20 மார்ச், 2013

நீங்கள் நினைத்தவுடன் களைந்து விட ஹிஜாப் எங்கள் உடையல்ல.... - உயிர்


நீங்கள் நினைத்தவுடன் களைந்து விட ஹிஜாப் எங்கள் உடையல்ல.... - உயிர்

வெற்று வார்த்தைகளால் விரட்டி விட - அது 

வெறும் உணர்வல்ல... - எம் பெண்ணினத்தின் உரிமை

மிரட்டல்களால் துகிலுரிய அவை துப்பட்டாக்கள் அல்ல...எங்கள் 

மானம் காக்கும் தோட்டாக்கள்.....


நாங்கள் ஹிஜாப் உடுத்துவது என்னவோ உடலில்தான்...- ஆனால் 

எங்கள் உயிரோடல்லவா அதைத் தைத்து வைத்திருக்கிறோம்????


அதைக்களைய உங்களால் ஒருபோதும் முடியாது....

ஹலால் எங்கள் கிணற்றுத்தண்ணீர்..... 

திருட்டுத்தனமாய் கவர நினைத்தீர்கள்...

நாங்களே  அள்ளிக்கொடுத்துவிட்டோம் - அது எங்கள் பெருந்தன்மை.. 


ஆனால் ஹிஜாப்???? 

நாங்கள் அடுப்பெரிக்கும் நெருப்பு 

அணைக்க நினைக்காதீர்கள்!!!! எரிந்து போவீர்கள்.... 

புத்தரின் போதனைகளில் ஒன்றைத்தானும் 

உடன் பிறந்தவர்களுக்கே ஊட்ட முடியாத நீங்களா???? 

உடைக்க நினைக்கிறீர்கள் எங்கள் ஈமானிய உணர்வுகளை...

உடை உடுத்தும் நிர்வாணமாய் அலைகிறாளே உங்கள் இன சகோதரி...

முடிந்தால் அவளுக்கு அறிமுகம் செய்யுங்கள்;.. 


புத்தர் வறையறுத்த ஆடைகளில் ஒன்றையேனும்... 


முடியாது!!!!!!..- உங்களால் முடியவே முடியாது.. 

உங்கள்; சமூகத்தில் நீங்கள் ஆடுகளாய் மாறிப்போனதினால்தான் 

எங்களிடம் வேங்கைகளாய் வேசம்போடுகிறீர்கள்!!!!...


உங்களை அன்புடன் தொட்டுப் பேசியதற்காய் - எம் இனத்தை

வெட்டிப்போடப்பார்க்கிறீர்கள்...- ஆனால்

அந்நிய தேசத்தில் உங்களில் ஒருவன் 

அடிமேல் அடிவாங்குகின்றான்... காவியுடைக்காகவும்,,,, 

என்றோ நீங்கள் செய்த பிழைக்காகவும்....


இப்போது எங்கே உங்கள்; இணையத்தளங்களும்...

இதயமே இல்லாத கருத்துரைகளும்...

போதி மரங்களில் ஞானப்பால் வடியலாம்!!!!!

ஆனால் இன்று கள்ளிப்பால் அல்லவா வடிகிறது????...

காவியுடைகள் கூட இன்று இனவாதத்தால் கறுத்துப்போய்விட்டன.


மனிதாபிமானமே இல்லா தர்மச்சக்கரங்களுக்குள் 

மிதிபடுகிறது எங்கள் பெண்மை..

மிருகவதைக்காய் குரல் கொடுக்கும் உங்கள் தர்மத்தில் 

மனித வதைக்கு தாராள அனுமதியோ????

உங்கள் அகோரப்பசிக்கு ஆளான..... 


சின்னஞ்சிறுசுகளில் ஒன்றைக்கேட்டுப்பாருங்கள்..

அது சொல்லும்.... நானும் ஹிஜாப் அணிந்திருந்தால் - இந்த 

மிருகங்களிடம் இருந்து தப்பியிருப்பேன் என்று....


இத்தனைக்குப் பின்னரும் உங்களை மன்னிக்க மனசு வருகிறது...ஏனெனில்

நீங்கள் முகத்திற்கு முன்னால் நின்று

எங்களை எதிர்க்கும் வீரர்கள் என்பதால்...

பெற்ற தாயின் முக்காடுகள் களையப்படும் பொழுதும்,,,,,,

உடன் பிறந்தவளின் உடைகள் கிழிக்கப்படும் பொழுதும்....,,,

எங்கள் தனித்துவமும் தன்மானமும் நசுக்கப்படும் பொழுதும்,,,,,

எச்சில் ஒழுகும் நாக்குகளை தொங்கவிட்டுக்கொண்டு..

எஜமான விசுவாசத்துடன்... 


மௌனமாய் இருக்கிறார்களே எங்கள் அரசியல் தலைமைகள் 

அவர்களைவிட நீங்கள் எவ்வளவோ மேல்...


எங்களை வதைத்தாவது நீங்கள் பௌத்தம் வளர்க்க நினைக்கிறீர்கள்.... 

அவர்களோ!!!! எங்களை விற்றாவது பதவிகளை வாங்க நினைக்கிறார்கள்..

காலவோட்டத்தில் உங்கள் தவறுகள் மறைந்து போகலாம்;;....

கடைசிவரை அவர்களின் துரோகத்தினை மறக்கமாட்டோம்....

மீண்டும் ஒரு முறை அவர்களை பதவியில் இருத்த மாட்டோம்... 


ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்..- சரித்திரத்தில்

எங்கள் வரலாறு  இரண்டு விதமாய் எழுதப்பட்டிருக்கிறது...

சிங்கள அரசனுக்காய் உயிர் துறந்த பெண்மையும் நாங்களே..

சீறிவந்த எதிரியின் தலைகளைக் கொய்த,,,,, 

சுமையாக்களும் நாங்களே!!!!


எழுத்து :-(காத்த நகர் சகீனத்)

நன்றி :-jafna muslim
நீங்கள் நினைத்தவுடன் களைந்து விட ஹிஜாப் எங்கள் உடையல்ல.... - உயிர்

வெற்று வார்த்தைகளால் விரட்டி விட - அது

வெறும் உணர்வல்ல... - எம் பெண்ணினத்தின் உரிமை

மிரட்டல்களால் துகிலுரிய அவை துப்பட்டாக்கள் அல்ல...எங்கள்

மானம் காக்கும் தோட்டாக்கள்.....


நாங்கள் ஹிஜாப் உடுத்துவது என்னவோ உடலில்தான்...- ஆனால்

எங்கள் உயிரோடல்லவா அதைத் தைத்து வைத்திருக்கிறோம்????


அதைக்களைய உங்களால் ஒருபோதும் முடியாது....

ஹலால் எங்கள் கிணற்றுத்தண்ணீர்.....

திருட்டுத்தனமாய் கவர நினைத்தீர்கள்...

நாங்களே அள்ளிக்கொடுத்துவிட்டோம் - அது எங்கள் பெருந்தன்மை..


ஆனால் ஹிஜாப்????

நாங்கள் அடுப்பெரிக்கும் நெருப்பு

அணைக்க நினைக்காதீர்கள்!!!! எரிந்து போவீர்கள்....

புத்தரின் போதனைகளில் ஒன்றைத்தானும்

உடன் பிறந்தவர்களுக்கே ஊட்ட முடியாத நீங்களா????

உடைக்க நினைக்கிறீர்கள் எங்கள் ஈமானிய உணர்வுகளை...

உடை உடுத்தும் நிர்வாணமாய் அலைகிறாளே உங்கள் இன சகோதரி...

முடிந்தால் அவளுக்கு அறிமுகம் செய்யுங்கள்;..


புத்தர் வறையறுத்த ஆடைகளில் ஒன்றையேனும்...


முடியாது!!!!!!..- உங்களால் முடியவே முடியாது..

உங்கள்; சமூகத்தில் நீங்கள் ஆடுகளாய் மாறிப்போனதினால்தான்

எங்களிடம் வேங்கைகளாய் வேசம்போடுகிறீர்கள்!!!!...


உங்களை அன்புடன் தொட்டுப் பேசியதற்காய் - எம் இனத்தை

வெட்டிப்போடப்பார்க்கிறீர்கள்...- ஆனால்

அந்நிய தேசத்தில் உங்களில் ஒருவன்

அடிமேல் அடிவாங்குகின்றான்... காவியுடைக்காகவும்,,,,

என்றோ நீங்கள் செய்த பிழைக்காகவும்....


இப்போது எங்கே உங்கள்; இணையத்தளங்களும்...

இதயமே இல்லாத கருத்துரைகளும்...

போதி மரங்களில் ஞானப்பால் வடியலாம்!!!!!

ஆனால் இன்று கள்ளிப்பால் அல்லவா வடிகிறது????...

காவியுடைகள் கூட இன்று இனவாதத்தால் கறுத்துப்போய்விட்டன.


மனிதாபிமானமே இல்லா தர்மச்சக்கரங்களுக்குள்

மிதிபடுகிறது எங்கள் பெண்மை..

மிருகவதைக்காய் குரல் கொடுக்கும் உங்கள் தர்மத்தில்

மனித வதைக்கு தாராள அனுமதியோ????

உங்கள் அகோரப்பசிக்கு ஆளான.....


சின்னஞ்சிறுசுகளில் ஒன்றைக்கேட்டுப்பாருங்கள்..

அது சொல்லும்.... நானும் ஹிஜாப் அணிந்திருந்தால் - இந்த

மிருகங்களிடம் இருந்து தப்பியிருப்பேன் என்று....


இத்தனைக்குப் பின்னரும் உங்களை மன்னிக்க மனசு வருகிறது...ஏனெனில்

நீங்கள் முகத்திற்கு முன்னால் நின்று

எங்களை எதிர்க்கும் வீரர்கள் என்பதால்...

பெற்ற தாயின் முக்காடுகள் களையப்படும் பொழுதும்,,,,,,

உடன் பிறந்தவளின் உடைகள் கிழிக்கப்படும் பொழுதும்....,,,

எங்கள் தனித்துவமும் தன்மானமும் நசுக்கப்படும் பொழுதும்,,,,,

எச்சில் ஒழுகும் நாக்குகளை தொங்கவிட்டுக்கொண்டு..

எஜமான விசுவாசத்துடன்...


மௌனமாய் இருக்கிறார்களே எங்கள் அரசியல் தலைமைகள்

அவர்களைவிட நீங்கள் எவ்வளவோ மேல்...


எங்களை வதைத்தாவது நீங்கள் பௌத்தம் வளர்க்க நினைக்கிறீர்கள்....

அவர்களோ!!!! எங்களை விற்றாவது பதவிகளை வாங்க நினைக்கிறார்கள்..

காலவோட்டத்தில் உங்கள் தவறுகள் மறைந்து போகலாம்;;....

கடைசிவரை அவர்களின் துரோகத்தினை மறக்கமாட்டோம்....

மீண்டும் ஒரு முறை அவர்களை பதவியில் இருத்த மாட்டோம்...


ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்..- சரித்திரத்தில்

எங்கள் வரலாறு இரண்டு விதமாய் எழுதப்பட்டிருக்கிறது...

சிங்கள அரசனுக்காய் உயிர் துறந்த பெண்மையும் நாங்களே..

சீறிவந்த எதிரியின் தலைகளைக் கொய்த,,,,,

சுமையாக்களும் நாங்களே!!!!


எழுத்து :-(காத்த நகர் சகீனத்)

நன்றி :-jafna muslim

சனி, 9 மார்ச், 2013

சிங்களவர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாகவே வாழ்கின்றனர் - கடுகன்னாவ விஹாராதிபதி




சிங்கள முஸ்லிம் மக்களுடைய உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டது. இன்று இந்த உறவு புதிதாக ஏற்பாட்டதொதன்றல்ல. .பொது விடயங்களில் கலந்து சிறப்பதைப் போன்று  திருமண வைபவங்கள்  சமய, கலாசார விழாக்கள், சுக துக்கம் போன்ற முக்கிய பல்வேறு நிகழ்வுகளின் போது நாங்கள் ஒன்று பட்டும் பின்னிப் பிணைந்து வாழ்ந்து வருகின்றோம்  கடுகன்னாவ  கொட்டபோகொட மஹாவிஹாராதிபதி தெரிவித்தார்.

கடுகன்னாவ மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி தயாரத்னவின் வேண்டுகோளின் பிரகாரம் தெனுவர முஸ்லிம் நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில் பெருந்தொகையான வைத்திய உபகரணங்கள்  வழங்கி வைக்கும் நிகழ்வு கடுகன்னாவ மாவட்ட வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் மாவட்ட வைத்திய அதிகாரி தயாரத்னவின் தலைமையில் 08 -03-2013 நடைபெற்றது.

விஹாராதிபதி தொடர்ந்து பேசுகையில்,,

அன்று எங்களுடைய அரசியல் பிரதிநிதியாக தபால் துறை அமைச்சர் இம்தியாஸ் விளங்கனார். அவர் எந்தவிதமான இன மத குல வேறுபாடின்றி சேவையாற்றினார். அவர் பாலிமொழியை மிகத் திறன்படக் கற்றிருந்தார். அவர் சிங்கள மக்களை விட சிறந்த முறையில் பௌத்த சமயத்தின் அறக் கருத்துக்களை வியாக்கியானம் செய்வார். இதனை நாங்கள் மிகுந்து ஆர்வத்துடன் கேட்போம். அவர் தம் பிரதேசத்திற்கு ஆற்றிய பணிகள் ஏராளம். அதேபோல் நாங்கள் அனைவரும் தத்தமது சமய கலாசார நடவடிக்கைளுக்கு  ஏற்ப கௌரவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருகின்றோம்.

வைத்தியசாலை என்பது  இந்நாட்டில் உள்ள சகல மக்களுக்கும் உரித்தான ஒன்று. இந்த வைத்தியாசலைக்கு சிங்கள் முஸ்லிம், தமிழ் மக்கள் யாவரும் இங்கே வருகை தருகின்றார்கள். தம் பிரதேச வைத்தியசாலையினை அதற்குத் தேவையான சகல வளங்களையும் கொண்டதாக உள்ளன. எனினும் சில சில குறைபாடுகள் காணப்படுகின்றன. அந்தக் குறைபாடுகளை தனவந்தர்கள் மூலமாகவும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் இந்த வைத்தியசாலையின் குறைபாட்டை நிவர்த்தி செய்து வருகின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் தெனுவர முஸ்லிம் நட்புறவு ஒன்றியத்தின் பங்களிப்பு கிடைத்துள்ளது. அது எங்களுடைய வைத்தியசாலையில் காணப்பட்ட பெரும் குறைபாடா விளங்கிய தேவையொன்றை நிவர்த்தி செய்யக் கூடியதாக உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஊராப்பொல ஸ்ரீ ஆதயராஜ விஹாராதிபதி கடுகன்னாவ நகர சபையின் நகரபிதா அபே சிரிவர்தன, கடுகன்னாவ நகர சபையின் பிரதி நகரபிதா மொஹிதீன், நகர சபையின் எதிர்கட்சித் தலைவர் சிசிர அபேகுனவர்தன , கடுகன்னாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிமல் சந்திரசிரி, தெனுவர முஸ்லிம் நட்புறவு சங்கத்தின் பொதுச் செயலாளர் முன்னாள் ஓய்வு பெற்ற மத்தியமாகாண கல்விச் செயலாளர் ஏ. எம் ரீசா, அதன்  அதிகாரிகள் மற்றும் உலமாக்கள் கண்டி ஐடெக் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஐ. ஐனுடீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



site counter