அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

ஹிஜாப் அணிந்த ஆசிரியைகளை அவமானப் படுத்திய கல்முனை பாடசாலை.!


Picture
கல்முனை கார்மல் பாத்திமா பாடசாலையில் இன்று இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் உடையில் சென்ற ஆசிரியையை அங்குள்ள ஏனைய மத ஆசிரியர்கள் அதிபர்கள் அனைவரும் பாடசாலை வாசலில் வைத்து மறித்து அவமானப்படுத்தி ஹிஜாப் அணிந்து இனி வர முடியாது என்று திட்டி, குறித்த ஆசிரியையை அவமானப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது.. சமீபத்தில் ஆசிரிய இடமாற்றம் காரணமாக 7 முஸ்லீம் ஆசிரியைகள் கார்மல் பாத்திமாபாடசாலைக்கு புதிதாக வந்துள்னர். இவர்கள் வழமையாக தாம் அணிகின்ற ஹிஜாபுடன் பாடசாலை செல்ல, அங்குள்ள அதிபர்க உட்பட ஆசிரியர்கள் அனைவரும் ‘எங்கள் பாடசாலையில் ஆசிரியர்களுக்கான உடை சேலை கட்டுவதுதான்’ ஆகையால் நீங்களும் அவ்வாறுதான் வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இல்லை இது எங்கள் மார்க்கம் சம்பந்த்தப்படது’ என்று குறிப்பிட்ட ஆசிரியைகள் விளக்கியும் பாடசாலை நிர்வாகம் அதை ஏற்காமல் “சேலை தான் கட்டவேண்டும்” என்று கட்டாயபடுத்தியதோடு விசாரணை என்ற பெயரில் அவமானப்படுத்தியும் உள்ளனர்.
இன்று மருதமுனையை சேர்ந்த குறித்த ஆசிரியை ஹிஜாப் உடையில் பாடசாலை சென்ற போது பெண் ஆசிரியைகள் அவரை பாடசாலை வாசலிலே வைத்து வழிமறித்து இந்த உடை போட்டு உள்ளே வரக்கூடாது என்று கூறியுள்ளனர். மேலும் பாடசாலை அதிபரும் தனிப்பட்ட விசாரணை என்ற பெயரில் குறித்த ஆசிரியையை இனி இந்த உடையில் வரகூடாது என்று நிர்பந்த்திதுள்ளார். பிரச்சனை பின் பாரிய அளவில் போய் குறித்த ஆசிரியையை அணைத்து ஆசிரியரிகளிடத்திலும் மன்னிப்பு கேட்கயும் வைத்து அவமானபடுத்தியுள்ளனர்.
சமூக நல் பிரஜைகளை உருவாகும் பாடசாலை ஒன்று இவ்வாறு கீழ்த்தரமாக நடந்துள்ளதமை கண்டிக்கத்தக்கதும் வேதனைகுரியதுமான விடையமாகும்.
இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால் கார்மல் பாத்திமா பாடசாலையில் சேலை அணியாது கிருஸ்தவ ஆசிரியைகள் அவர்களின் மத கலாசார உடையில் கற்பிக்கின்றனர்.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

RPL முறையில் Computer NVQ Level-3 ற்கான அரச சான்றிதழைப் பெற விரும்புவோருக்கான முன் மதிப்பீடு எதிர்வரும் சனிக்கிழமை சம்மாந்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். Call:0752787252


'தயட்ட கிருள்ள'; திட்டத்தின் கீழ்; 

Recognition of Prior Learning (RPL)  முறையில் Computer Application Assistant 

(NVQ Level - 03) ற்கான அரச சான்றிதழைப் பெறுவதற்கான மதிப்பீட்டுப் பரீட்சையானது கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ளது.

எனவே தகுதியுடையோர் அதற்கான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள, உரிய ஆவணங்களோடு எதிர்வரும் (23-02-2013) சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு சம்மாந்துறை தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சமூகமளிக்கவும்.

தகைமைகள்: 

கணனி தொடர்பாக 2 வருடங்களுக்கு மேற்பட்ட வேலைத்தள அனுபவம் இருத்தல் வேண்டும். 

கணனியில் பின்வரும் பாடங்களில் தேர்ச்சியுடையவராக இருத்தல்

K72S003U01
Use the computer and manage files within standard operating systems
K72S003U02
Perform Word Processing (MS-Word)
K72S003U03
Prepare Spreadsheets (MS-Excel)
K72S003U04
Prepare computer aided presentation recourses (MS-PowerPoint)
K72S003U05
Setup and use databases (MS-Access)
K72S003U06
Perform Internet and Electronic mail operations

தேசிய தொழில் தகைமைகள் (NVQ) மற்றும் (RPL) சான்றிதழ்

தேசிய தொழில் தகைமைகள் NVQ மாதிரி.

தேசிய தொழில் தகைமைகள் சான்றிதழ் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் முறையான பயிற்சி நெறியொன்றைப் பின்பற்றி ஏதேனுமொரு தொழிலில் தேர்ச்சி பெற்றவர்கள் போன்று தொழிலொன்றில் ஈடுபடுவதன் மூலம் நீண்டகாலமாகப் பெறுகின்ற பழக்கம் வரவேற்கப்படும்.

தேசிய தொழில் தகைமைகள் சான்றிதழ் நிகழ்ச்சித் திட்டத்தின் பயன்கள்.

  • தேசிய தொழில் தகைமைகள் சான்றிதழ் பயிற்சி சான்றிதழ் அல்ல.
  • நீங்கள் ஈடுபட்டுள்ள தொழிலில் பெற்றுள்ள தேர்ச்சி மட்டத்தை (NVQ Level) முறையாக மதிப்பீடு செய்ததன் பின்னர் அதை ஒழுங்காக ஏற்றுக்கொள்தல், சான்றிதழ் வழங்கல் மேற்கொள்ளப்படுகிறது. அது உங்களுடைய தேர்ச்சிக்காக வழங்கப்படுகின்ற சான்றிதழாகும்.
  • தேசிய தொழில் தகைமை ஊடாகப் பெறுகின்ற வரவேற்பை அடிப்படையாகக்கொண்டு உயர் தகைமை பெறுவதில் ஈடுபடமுடியும்.
  • தேசிய தொழில் தகைமை என்பது தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டு முறையாக இருக்கின்ற அதேநேரத்தில், அதற்காக வெளிநாட்டுத் தொழிற்சந்தையில் உயர்ந்தளவில் கேள்வி இருக்கிறது.
  • தேசிய தொழில் தகைமைகளுக்காகத் தரக்கட்டளை நிர்ணயித்தல், அதன்பொருட்டு தகைமை பெற்ற திறமைசாலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற அதேநேரத்தில், அதன் காரணமாகவே தேசிய தொழில் தகைமைகள் சான்றிதழ் பயனாளிகளுக்கு அதிக தொழில் வாய்ப்புகள் உள்ளது.
  • தேசிய தொழில் தகைமைகள் உள்ளவர்களுக்கு உயர் தகைமைகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியிருந்தால் அச்செயல்முறை அதற்கு உறுதுணையாக இருக்கிறது.

சேவைதருநர் பெறும் பயன்கள்

  • தேசிய தொழில் தேர்ச்சியுள்ள குழுக்களை சேவையில் சேர்த்துக்கொள்வதன் காரணமாக மிக இலகுவாகவும் வினைத்திறன் மிக்கவகையிலும் தொழில் தேர்ச்சியுள்ள ஊழியர்களை உருவாக்கிக்கொள்ளக்கூடியதாக இருத்தல்.
  • தேசிய தொழில் தேர்ச்சிச் சான்றிதழ் காரணமாகப் பதவியுயர்வுகளையும் மிகச் சிறந்த இடைத்தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் கட்டியெழுப்பிக்கொள்ளக்கூடியதாக இருத்தல்.

RPL என்றால் என்ன?

RPL (Recognition of prior learning) தேசிய தொழில் தகைமைகள் மாதிரியின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற தேசிய அடிப்படையிலான திறன்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்படுகின்ற நபர்கள் பெற்றுக்கொண்டுள்ள தேர்ச்சியை வகைப்படுத்தலுக்குள்ளாக்கி மேற்படி தேர்ச்சிகளை முறைசாராத மற்றும் பாரம்பரியங்களுக்குப் புறம்பான செயல்முறைகளைப் பயன்படுத்தி முழுமையான வரவேற்புக்குட்படுத்துவது அச்செயல்முறையாகும்.
தேசிய தேர்ச்சித் தரக் கட்டளையை அடிப்படையாகக் கொண்டு அதற்கு சார்பியலாக ஒவ்வொரு பயிற்சி நெறியின் மூலமும் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலமும் வழங்கப்படுகின்ற தேர்ச்சியை மதிப்பீட்டுக்கு உட்படுத்துதல் மற்றும் அதன்மூலம் கலந்துகொள்கின்ற பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழ் வகைப்படுத்தலுக்குட்படுத்தப்படுகிறது.
  • தேசிய தொழில் தகைமைகளுக்காக நபர்களை மதிப்பீட்டுக்குட்படுத்துதல்.
  • தேர்ச்சி மட்டத்தை நிர்ணயிப்பதற்காக பயிற்சியொன்றை மதிப்பீட்டுக்குட்படுத்துதல்.

பின்வரும் வரைபடம் RPL செயல்முறையை விளக்குகிறது.

மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற பயிற்சி நிறுவனங்களை RPL செயல்முறையினூடாக மதிப்பீட்டுக்குட்படுத்துவதற்காக விண்ணப்பிப்பதற்குத் தகுதியானதாகும். ஆகவே, முன்னர் ஏற்றுக்கொள்ளப்படாத திறன்களும் தேர்ச்சிகளும் நிறுவனக் கட்டமைப்புக்குப் புறம்பாக தேசிய தொழில் தகைமைகளுடன் ஒப்பிட்டு தேர்ச்சியை நிர்ணயிப்பதற்காக ஆற்றுப்படுத்தப்படுகிறது.

தேசிய தொழில் தகைமையை RPL செயல்முறையின் மூலம் வழங்குதல்.

  • உரிய நேரத்தில் நிறுவனத் தலைவர் அல்லது வேலைப் பரிசோதகரால் சான்றுப்படுத்தப்படுகின்ற பயிற்சி / தொழிலில் ஈடுபட்டுள்ள தேர்ச்சிச் சான்றிதழ் அறிக்கை மூலம்.
  • கைப்பணிகளும் மாதிரிகளும்.
  • தேர்ச்சியை ஏற்றுக்கொண்டு வழங்குகின்ற சான்றிதழ் பரிந்துரை.
  • குறித்த துறையில் திறமை பெற்றவர்கள் செய்யும் பரிந்துரை.
  • தொழிலில் / பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றபோது பதிவு செய்யப்பட்ட கட்புல நாடாக்களைப் பயன்படுத்தி.
  • சேவையிலீடுபட்டிருக்கின்ற நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்ற கள அவதானிப்பு.
  • செயல்முறை ரீதியான / கோட்பாட்டு ரீதியான ஆய்வு.
உங்களுடைய வாழ்க்கைத் தொழில் உங்களிடமுள்ள திறமை, ஆற்றல் என்பவற்றின் மீது இற்றைவரையும் தங்கியிருந்தது. தற்போது தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை தொழில் தேர்ச்சிக்காகத் தேசிய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்திருப்பதன் காரணமாக உங்களிடமுள்ள தேர்ச்சிக்கு தேசிய தேர்ச்சிச் சான்றிதழைப் (NVQ) பெற்றுக்கொள்ள வாய்ப்புக் கிட்டியுள்ளது.
இதற்கு வயதெல்லையோ அல்லது அடிப்படைத் தகைமையோ தேவையில்லை. இச்சான்றிதழ்கள் தேசிய ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அதேநேரத்தில் சர்வதேச ரீதியாகவும் வரவேற்கப்படுகின்றது. நீங்கள் சுயதொழிலில் ஈடுபட்டிருந்தால் இச்சான்றிதழ் வங்கிக் கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்குப் பயனுறுதியுள்ளதாக அமைகின்றது.
இதன்மூலம் திறக்கப்படுகின்ற பாதை தேசிய டிப்ளோமா, உயர் டிப்ளோமா மற்றும் பட்டம் அடிப்படையிலான தகைமைகளுக்கு வழிகாட்டுகின்ற அதேநேரத்தில், அதன் பிரகாரம் உங்களுடைய எதிர்கால தொழில் வாழ்க்கைத் தன்னம்பிக்கையுடன் வடிவமைத்துக்கொள்ள வாய்ப்பளிக்கின்றது.
தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற இடத்தில் அல்லது உங்களுடைய வேலைத்தல சுற்றுச்சூழலில் அல்லது பயிற்சி நிலையமொன்றில் உங்களுடைய தேர்ச்சி அல்லது ஆற்றல் மதிப்பீட்டுக்குட்படுத்தப்படுகின்றது.
நீங்கள் தேசிய தொழில் தேர்ச்சிச் சான்றிதழ் ஒன்றை உரித்தாக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாகவிருந்தால் அதன்பொருட்டு பதிவுசெய்து கொள்வதற்காக ரூபா 250/- பணத்தை அதிகார சபைக்குச் செலுத்துவதன் மூலமும் அது குறித்த விண்ணப்பப்படிவத்தை இவ் வெப் தளத்தினூடாக அல்லது அதிகார சபைக்கு வந்து பெற்று நிரப்பிக் கொடுப்பதன் மூலமும் ஒப்படைக்கமுடியும்.
பதிவுக் கட்டணம்.
  • நுகேகொட மக்கள் வங்கிக் கிளையில் 174100170347379 இலக்கமுடைய கணக்கிற்கு அல்லது எந்தவொரு மக்கள் வங்கிக் கிளையிலும் கட்டணத்தைச் செலுத்த முடியும்.
  • எந்தவொரு கடமை நாளிலும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தேசிய தொழில் தகைமைகள் பிரிவுக்கு வந்து பின்வரும் முகவரியில் பணத்தைச் செலுத்தமுடியும்.
  • ரூ. 250/- பணம் செலுத்தியதன் பின்னர் அப்பற்றுச்சீட்டை தபால் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்பமுடியும் அல்லது நேரில் கொண்டுவந்து ஒப்படைக்கமுடியும்.
மேற்படி கட்டணத்திற்கு மேலதிகமாக, பயிற்சி பரீட்சைகளுக்குப் பயன்படுத்துகின்ற மூலப்பொருட்கள் மற்றும் ஏனைய ஆய்வுக் கட்டணங்கள் ஏற்புடையதாகலாம்.

விண்ணப்பப்படிவங்களை ஒப்படைக்கவேண்டிய, மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய முகவரி:

தேசிய தொழில் தேர்ச்சி தகைமைகள் மதிப்பீட்டுப் பிரிவு,
தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை,
இல. 971, ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்த,
வெலிகட, இராஜகிரிய.
தொ.பே. இல. +94 11 2863680


National Vocational Qualification (RPL / NVQ)

Award of National Vocational Qualification (NVQ) Recognition of Prior Learning (RPL) Certificate

NVQ Framework

The NVQ framework provides for persons to acquire certificates through undergoing a formal institutional training as well recognizing competencies acquired through informal non - institutional means as shown in figure below.

Advantages to NVQ certificate holders

  • NVQ Certificate is not a training certificate.
  • certifies your skills. It is a Nationally recognized certificate that confirms, you possess skills up to the respective NVQ level in that occupation.
  • Career path to obtain qualifications in higher levels of this framework and gaining relevant skills on the basis of experience and competencies.
  • NVQ System is a skill evaluation system & has a high tendency for a foreign employment.
  • Since the Skill Standards are prepared with the contribution of professionally competent personnel in the industry, such skills are consisted with functions to be carried out in the Industry. Therefore, it is easier to seek jobs for NVQ certificate holders.
  • If NVQ certificate recipients are enthusiastic to gain higher qualifications; the system encourages upgrading their career development.

Advantages to employers.

  • As skills required for Industries are identified and consisted with skills those certified by NVQ system, it is the best fit to employ NVQ holders in their institutions.
  • NVQ Qualification could be used for the recruitment of technical hands for institutions, and also eligible for promotions and higher salaries etc.

What is meant by RPL?

RPL (Recognition of prior learning) is an assessment process that assesses the person’s competencies acquired through informal, non-institutional learning to determine the extent to which that person has achieved the required competencies as set out in the relevant National Skills Standard leading to a qualification of the NVQ framework.
With regard to transfer of credits attained by persons in other courses, that particular course is assessed to determine the extent to which it is equivalent to the performance levels as set out in the relevant National Skills Standard. In such a case, RPL is used to assess previously acquired knowledge and skills to fill the gap of prerequisite of a course. Therefore, RPL is implemented in two ways. namely,
  • Assessment of a person for NVQ
  • Assessment of a course for credit transfer

The following figure shows two ways of RPL implementation.

The training institutions whose courses have been accredited by the TVEC may assess a course for the purpose of credit transfer provided that their accreditation is extended to do so. Therefore, RPL involves the assessment of previously unrecognized skills and knowledge a person has achieved outside the formal institutional training for the purpose of award of NVQ qualifications as well as for the purpose of credit transfer for further study.

Supportive evidences to get NVQ through RPL

  • A routine report which certifies the skills performed relating to the training/employment which is certified by a competent supervisor/ officer.
  • Craftwork and samples.
  • Certificate of service in support of skills.
  • Recommendations made by the competent persons in the relevant trade.
  • Visual discs reflect how the work in respect of training/occupation is done.
  • Observation of carrying out the work.
  • Practical/ theoretical examinations.
Your career so far depended on your skills and ability. Now our authority (NAITA) has launched a programme to award a certificate of national recognition for your vocational skills, under which you have the opportunity of obtaining a National Vocational Qualification Certificate.
As this certificate enjoys national recognition it is recognized even for foreign employment. If you are self-employed this certificate will enable you even raise a bank loan.
As this certificate opens for you a path leading to the National Diploma, Higher Diploma or the degree level qualifications you will be able to plan your career path with confidence.
Your skill / ability could be tested and confirmed at your own workplace or a training center named by the National Apprentice and Industrial Training Authority.
If you are willing to obtain a National Vocational Qualification certificate, you can get yourself registered for the skills test held for this purpose by paying a sum of Rs. 1,000/=. Application form can be downloading from this site too.

Qualifications to apply NVQ Level 4
  1. Minimum 18 months industry experience for NVQ Level 2 or 3 and further 24 months experience for Level 4 after obtaining Level 2 or 3, OR
  2. Minimum 5 years relevant experience in formal employment with contributions for EPF or Pension, OR
  3. Minimum 5 years relevant experience in self-employment with a business registration

This registration fee,
  • Can be credited to Account No. 174100110350223 of the Nugegoda Branch of Peoples Bank or any Branch of People’s Bank
  • Can be paid to the National Vocational Qualification Section at the address given below on any working day of the week between 10.00 a.m. and 3.00 p.m.
  • The receipt you get on the payment of Rs. 1,000/- should be attached to the application form sent herewith on completing it, and both should be either sent by post or handed over to the address given below.
Please note that in addition to the registration fee, you are required to pay the cost of raw materials and testing charges in order to face the skills test.

Address for the submission of the application and for further particulars:

National Vocational Qualification Testing Section
National Apprentice & Industrial Training Authority,
971, Sri Jayawardenappura Mawatha,
Welikada, Rajagiriya.
T.P. for further particulars +94 11 2863680

To download RPL Application Form:

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

மாணவியுடன் படம்பார்த்த தேரருக்கு விளக்கமறியல்


காற்சட்டை மற்றும் சேர்ட் அணிந்துக்கொண்டு பாடசாலை மாணவியுடன் படம்பார்த்துக்கொண்டிருந்தாக கூறப்படும் தேரரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரான தேரர் நாரம்மல பிரதேசத்தைச்சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்த சந்தேக நபரையே விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கையடக்க தொலைப்பேசியில் தொடர்புகொண்டே இருவரும் காதல் தொடர்பினை ஏற்படுத்தி கொண்டிருப்பதாக வெலிவேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் கதைத்துக்கொண்டதற்கு அமைய வெலிவேரிய பட்டஹேன சந்திக்கு வந்துள்ளனர். அதன் பின்னர் இருவரும் முச்சக்கரவண்டியில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்துள்ளனர். பின்னர் மாணவி பாடசாலை சீருடையை மாற்றிக்கொண்டுள்ளார்.

அதற்கு பின்னர் கம்பஹாவிற்கு சென்று இருவரும் திரைப்படத்தை பார்த்துள்ளதாக பொலிஸார் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் குறித்த சந்தேக நபரின் பேக்கில் இருந்து காவியுடையும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்தே குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புதன், 13 பிப்ரவரி, 2013

சிங்கள இனவாதிகளின் நெருக்கடிகளில் இருந்து விடுபட முன்மாதிரியான செயற்பாடு அவசியம்-நிந்தவூர் அல்-அஸ்றக் பாடசாலையில் பைசால் காசீம்




(அஸ்லம் எஸ்.மௌலானா)

நபி (ஸல்) அவர்களின் வாழ்வியலை பின்பற்றி, ஏனைய மதத்தவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வதன் மூலமே சிங்கள இனவாதிகளின் நெருக்கடிகளில் இருந்து முஸ்லிம்கள் விடுபட முடியும் என்று திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளருமான பைசால்  காசிம் தெரிவித்தார்.
  
கல்முனை வலய மீலாதுன் நபி பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பைசால் காசிம் எம்.பி. இதனைக் குறிப்பிட்டார்.

2012ம் ஆண்டின் தேசிய மீலாதுன் விழா போட்டியில் தேசிய ரீதியில் பங்கு கொண்டு  வெற்றி பெற்ற கல்முனை கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் நேற்று செவ்வாய்க்கிழமை (12) நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலயில் நடைபெற்றது.
 
கல்முனை கல்வி வலயப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசிம் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவதில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;

"முஸ்லிம்களாகிய நாம் இந்நாட்டில் தற்பொழுது மிகவும் சிக்கலான கால கட்டத்தில் உள்ளோம், சிங்கள இனவாத குழுக்கள் எம்மை வீண் பிரச்சினைக்குள் இட்டுச் செல்ல காரணம் தேடி அலைகின்றன.  எம்மீது பல குற்றச் சாட்டுக்களை சுமத்தி நெருக்கடி கொடுத்து வருகின்ற சிங்கள இனவாதிகள், சமூக, கலாசார ரீதியாக எம்மை நசுக்க திட்டமிட்டுள்ளனர். 

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் வாழ்வியலை பின்பற்றுவதிலும் ஏனைய மதத்தவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வதும் கல்வி ரீதியாக பலம் மிக்கவர்களாக மாறுவதும் மிக அவசியமாகும்.
 
குறிப்பாக முஸ்லிம் மாணவர்கள் கலாச்சார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் தங்களை வளர்த்துக் கொள்வது காலத்தின் தேவையாகும்" என்றும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் இளைஞர் மீது பொலிஸார் அகோர தாக்குதல் (படங்கள் இணைப்பு)




(மூதூர் முறாசில்)

மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஓருவர் மூதூர் பொலிஸாரின்   தாக்குதலுக்கு உள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரிய வருவதாவது,

மூதூர் ஜின்னா நகர் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது மஹ்ரூப்  அஸ்வர்(வயது:23) என்பவர் இளம் மாடு(கன்று)  ஓன்றை நேற்று மாலை கடும் மழைபெய்து கொண்டிருந்த நிலையில் முச்சக்கரவண்டியில் தனது வீடு நோக்கி கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அம்முச்சக்கர வண்டியை நிறுத்தி பரிசோதித்த  பொலிஸார் அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன் கடுமையாகத் தாக்கிதோடு இன்று அவரை பலத்த காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


சமூக, கலாசார ரீதியாக முஸ்லிம்களை நசுக்க சிங்கள இனவாதிகள் திட்டம்!


Faizal

-இ.முஹம்மட் பாயிஸ்- 
நபி (ஸல்) அவர்களின் வாழ்வியலை பின்பற்றி, ஏனைய மதத்தவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வதன் மூலமே இனவாதிகளின் நெருக்கடிகளில் இருந்து முஸ்லிம்கள் விடுபட முடியும் என்று திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளருமான பைசால்  காசிம் தெரிவித்தார்.
கல்முனை வலய மீலாதுன் நபி பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பைசால் காசிம் எம்.பி. இதனைக் குறிப்பிட்டார்.
2012ம் ஆண்டின் தேசிய மீலாதுன் விழா போட்டியில் தேசிய ரீதியில் பங்கு கொண்டு  வெற்றி பெற்ற கல்முனை கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் நேற்று நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலயில் நடைபெற்றது.
கல்முனை கல்வி வலயப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசிம் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவதில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;
“முஸ்லிம்களாகிய நாம் இந்நாட்டில் தற்பொழுது மிகவும் சிக்கலான கால கட்டத்தில் உள்ளோம், சிங்கள இனவாத குழுக்கள் எம்மை வீண் பிரச்சினைக்குள் இட்டுச் செல்ல காரணம் தேடி அலைகின்றன.
எம்மீது பல குற்றச் சாட்டுக்களை சுமத்தி நெருக்கடி கொடுத்து வருகின்ற சிங்கள இனவாதிகள், சமூக, கலாசார ரீதியாக எம்மை நசுக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் வாழ்வியலை பின்பற்றுவதிலும் ஏனைய மதத்தவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வதும் கல்வி ரீதியாக பலம் மிக்கவர்களாக மாறுவதும் மிக அவசியமாகும்.
குறிப்பாக முஸ்லிம் மாணவர்கள் கலாச்சார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் தங்களை வளர்த்துக் கொள்வது காலத்தின் தேவையாகும்” என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.தௌபீக், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம் உட்பட அதிபர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சென்ற ஆண்டுக்கான மீலாதுன் நபி விழா போட்டியில் கல்முனை கல்வி வலயத்தில் இருந்து தேசிய மட்டத்தில் 4 மாணவர்களும் மாகாண  மட்டத்தில் 15 மாணவர்களும் வலய  மட்டத்தில் 130 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இவ்மாணவர்களுக்கு இந்நிகழ்வில் பரிசில்களும் சான்றிதள்களும் வழங்கப்பட்டன.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

டுபாயில் தங்கத்தினால் எழுதப்பட்ட 450 வருடங்கள் பழமை வாய்ந்த அல்குர்ஆன் பிரதி (படம்)




தூய தங்கத்தினால் எழுதப்பட்ட 450வருடங்கள் பழமைவாயந்த அரிய புனித அல்குர்ஆன் பிரதியொன்று அண்மையில் துபாயில் நடைபெற்ற உலக ஆடம்பரக் கண்காட்சியில் காட்சிக்குவைக்கப்பட்டிருந்தது. 

இப்பழமை வாய்ந்த புனித அல்குர்ஆன் பிரதியானது தூய மான் தோலினால்செய்யப்பட்ட பக்கங்களில்,தூய தங்கத்தைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மேலும், இவ் அல்குர்ஆன் பிரதியின் அட்டைகள் தூய பனைமரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பழமைவாய்ந்த புனித அல்குர்ஆன் பிரதியானது டமஸ்கஸ்ஸில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இப்பழமைவாயந்த புனித அல்குர்ஆன் பிரதியானது துபாயின் அகா குழுமத்தினால் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.16ஆம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய ஜவ்ஹார் வகையைச்சார்ந்த  வாலுடன்,22கரட் தங்கத்தினால் செய்யப்பட்ட வாலுறையும் துபாய் உலக கண்காட்சியில்அகா குழுமத்தினால் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15முதல்17ஆம் திகதிவரை துபாயின் அல் அரப் அல்புரூஜில்,துபாய் உலக ஆடம்பரக் கண்காட்சி இடம்பெற்றது

ஆதரவாளர்களை உஷார் மடையராக்குவதில் மு.கா.வுக்கு நிகர் எதுவும் இல்லை; ராஜினாமா செய்யவே மாட்டார்கள்!


SLMC Logo

கரையோர மாவட்டக் கச்சேரி கேட்டு நின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகச்சிறிய தேவையான மேலதிக அரசாங்க அதிபரையும், தமது கட்சியினருக்கு பதவிகளும் கேட்டு, ஒரு மாத காலத்துள் இவை நிறைவேற்றப்படா விட்டால் அமைச்சுப்பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக் கூறியிருப்பது வெறும் வாய்ச்சவாடலே தவிர அரசு இந்த சாதாரண நிபந்தனைகளைக் கூட நிறைவேற்றப் போவதுமில்லை.இவர்கள் ராஜினாமா செய்யப்போவதுமில்லை என்பதை ஒரு சவாலாகவே கூறுகிறோம் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது;
இந்த நாட்டின் அரசியல் கட்சிகளில் மிகவும் பகிடித்தனமான அரசியல் செய்வது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டும்தான்.
விட்டமின் இல்லாமல் தமது ஆதரவாளர்கள் சோபை இழக்கும் போது இவ்வாறான வார்த்தைகளை கூறி அவர்களை உஷார் மடையர்களாக்குவதில் மு.காவுக்கு நிகர் இல்லை என்றே கூறலாம்.
அப்பட்டமான சுயநலன்களை மட்டுமே கருத்திற் கொண்ட உறுப்பினர்களைக் கொண்ட இக்கட்சி 2010ம் ஆண்டு ஐ தே க.வில் போட்டியிட்டு சில பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்ற பின் அக்கட்சிக்கு துரோகமிழைத்து விட்டு அரசுடன் இணையும் போது சமூகம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகள் எதைப் பற்றியும் பேச்சுவார்த்தை செய்யாமல் பதவிகள் மட்டும் தந்தால் போதுமென அடிமை நிலையில் அரசுடன் சேர்ந்தார்கள்.
அத்தோடு நிற்காமல் வெட்கங்கெட்ட தனமாய் 18வது திருத்தத்துக்கும் ஆதரவளித்து விட்டு பெரியதொரு தவறை செய்து விட்டோம் என தலைவர் தேர்தல் மேடைகளில் புலம்பினார்.
அதே போல்  கிழக்கு மாகாண சபை தேர்தலில் வீறாப்பு பேசி விட்டு அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்பட்டு அரசுக்கு முட்டுக் கொடுத்தவர்கள் மீண்டும் புதிதாக ஞானம் வந்தவர்கள் போல் அரசுக்கு புதிய நிபந்தனைகளை விதித்து ஒரு மாத காலக்கெடுவும் விதித்துள்ளமை இந்த ஆண்டின் முதலாவது நகைச்சுவையாகும்.
அரசுடன் இணையும் போது சமூகம் பற்றி அக்கறை இல்லாமல் பதவிகளுக்கு அடிமையாகி இணைந்து விட்டு இப்போது நிபந்தனைகள் இடுவதும் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்வதாக அச்சுறுத்துவதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வழமையான ஏமாற்று அரசியலாகும்.
அதன் ஆதரவாளர்களும் உஷாரடைந்து அல்லாஹு அக்பர் என கோஷம் போடுவதும் பின்னர் ஏமாந்து தலைவர்களை ஏசித்திரிவதும் புளித்துப்போன ஒன்றாகும்.
மௌலவி ஆசிரிய நியமனம்!
இந்த நாட்டின் வரலாற்றில் 2005ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலமா கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவாக களமிறங்கு முன் மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை பேசி அதனை ஏற்றுக் கொள்ள வைத்ததோடு அதனை பெற்றுக் கொடுத்தும் சாதனை படைத்தது.
அதுவும் எமக்கு பாராளுமன்ற உறுப்பினர் அல்லது ஒரு பிரதேச சபை உறுப்பினர் கூட இல்லாத நிலையில் நாம் ஹெல உறுமய போன்ற இனவாத கட்சிகளுடன் போராடி இதில் வெற்றி பெற்றோம்.
மு. கா ஸ்தாபக தலைவர் அமைச்சர் அஷ்ரபால் கூட முடியாது போன இதனை நாம் செய்தும் இதற்கு நன்றிக்கடன் செலுத்த இந்த சமூகமோ, மௌலவிமாரோ முன்வராத போதும் சமூகத்துக்காக துணிச்சலுடன் தொடர்ந்தும் நாம் இஸ்லாமிய அரசியல் செய்து வருகிறோம்.
சமூக அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றி எம்மைப் பார்த்தாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் ஆதரவாளர்களும் பாடம் படிக்க வேண்டும்.
அதை விடுத்து இவ்வாறு தமது பழைய கோரிக்கைகளை கைவிடுவதும் பின் சின்னச்சின்ன நிபந்தனைகளை இடுவதும், ராஜினாமா செய்வோம் என கொக்கரிப்பதும் பின்னர் இரகசியமாக ஏதாவது பதவியை பெற்றுக் கொண்டு, அரசு நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளது என்று சொல்லி மக்களை சமூகத்தை ஏமாற்றுவதும் தான் இக்கட்சியின் தொழிலாகும்.
எம்மைப் பொறுத்தவரை சுயநலவாத ஏமாற்றுக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் அதாவுள்ளா கட்சியையும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் தூக்கி வீசாத வரை அவர்களால் தமது சுயநல அரசியல் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு சமூக அரசியலை நோக்கி நடைபோட முடியாது என்பதை உறுதிபட கூறுகிறோம்.

மு.கா.வை முஸ்லிம் என்ற நாமத்துடன்தான் பதிவு செய்தோம்; விளக்குகிறார் ஸ்தாபக பொதுச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்!


உலமா கட்சி பதிவதற்கு அந்த ‘உலமா’ என்ற சொல்லை நீக்கி விட்டால் அக்கட்சியை அரசியல் கட்சியாக அங்கீகரிப்பதற்காக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார் என்று முபாறக் மௌலவி அண்மையில் கூறியுள்ளார் என பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

உண்மைதான் மேற்படி விடயம் தொடர்பாக வாசிக்கம் போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பதிவதற்காக சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் ஆணையாளரை மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ;ரப் அவர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான நானும் சட்ட வல்லுனரான பாயிஸ் முஸ்தபாவும் சென்றிருந்த போது அப்போதைய தேர்தல் ஆணையாளர் திரு. சந்திர ஆர். டி.சில்வா அவர்கள் எங்களைப் பார்த்து கூறியதைப் போல்தான் இப்போதையத் தேர்தல் ஆணையாளரும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்பதனை இங்கு நான் ஆச்சரியத்துடன் ஞாபமூட்டிப் பார்க்கின்றேன்.
அதாவது முதலில் முஸ்லிம் காங்கிரஸின் பெயரை மாற்ற வேண்டும் முக்கியமாக முஸ்லிம் என்ற சொல்லை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் இன ரீதியில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் பதிவதில்லை என்றும் மறுத்துரைத்தார்.
ஆனால் மறைந்த தலைவர் அஷ;ரப் அவர்கள் அதற்கு இணங்கவுமில்லை தேர்தல் ஆணையாரின் ஆணைக்குப் பணியவுமில்லை.
அப்படியென்றால் எங்களுக்கு முன்பு பதிந்த ‘தமிழ்’ அரசுக் கட்சியில் உள்ள தமிழ் என்ற சொல்லுடன்தான் அன்றும் அங்கீகரிப்பட்டுள்ளது என்ற நீண்ட காரசாரமான விவாதத்தின் பின்பு பல சட்ட நுணுக்கக் கோட்பாடுகளையும் கட்சியின் ஆவணங்களையும் நாங்கள் சமர்ப்பித்தோம்,
இதே முஸ்லிம் காங்கிரஸ் தான் அரசியல் கட்சியாகவே 1980ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது என்றும் அது காத்தான்குடியில் நடந்த அங்குராப்பணக் கூட்டத்தில்தான் எங்களால் தெரிவு செய்யப்பட்ட இதே பெயர்தான் அன்று சூட்டப்பட்டது எனவும் வாதிட்டோம்
எனவே பெயரை மாற்றமாட்டோம், முஸ்லிம் என்ற சொல்லையும் நீக்கமாட்டோம் எனத் தெரிவித்ததுடன் ஏறக்குறைய கடந்த 6 ஆண்டுகளாக இப்பெயருடன்தான் செயற்பட்டு வருவதாகவும் ஆணித்தரமாக ஆதாரங்களுடன் எங்கள் நிலைப்பாட்டை நிலைநிறுத்தினோம்.
இந்நிகழ்வு 1986ம் ஆண்டு கொழும்பு – 7, றோயல் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள கேம்பிறிச் பிளேசில் அமைந்திருந்த தேர்தல் ஆணையாளரின் காரியாலயத்தில் நடைபெற்ற நீண்ட விவாதத்தின் ஒரு பகுதிதான் இது.
இக்கட்சி 1980ம் ஆண்டு முதல் 1986ம் ஆண்டு பதியும்வரை அன்றுமுதல் அரசியல் ரீதியாக மட்டுமே எமது பிரதேசத்தில் செயற்பட்டு வந்தன என்பதற்கான ஆவணங்கள் அத்தனையையும் பத்திரிகைச் செய்திகள் கடிதத் தொடர்புகள் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் கூட்டக் குறிப்புகள் எல்லாவற்றையும் ஒருமித்து சமர்ப்பித்த போது தேர்தல் ஆணையாளரினால் எதுவும் பேச முடியவில்லை.
கடந்து வந்த 6 ஆண்டுகளுக்கான ஆவணங்கள்தான் அக்கட்சியைப் பதிவதற்கும் அன்று உதவியது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
மறைந்த மாமனிதரின் விவாதத் திறமையும் பாயிஸ் முஸ்தபாவின் சட்ட வியாக்கியானமும் என்னால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணக் குறிப்புகளும் கட்சி நடவடிக்கைக் கோவைகளும் ஆதார பூர்வமாக இருந்ததினால் அப்போதைய தேர்தல் ஆணையாளரினல் எங்களுக்கு எதிராக எதுவும் பேச முடியவில்லை.
இறுதில் இக்கட்சிக்கு முஸ்லிம் என்ற அப்பெயருடன்தான் பதியப்பட்டது. அச்சொல் வெட்டி நீக்கப்படவில்லை என்ற ஒரு வரலாற்றுச் சரித்திரத்தை இவ்விடத்தில் இன்றும் குறிப்பிட்டுக் காட்டுவதில் பெருமைப்படுகின்றேன்.
இதுவரை இக்கட்சியின் பெயரால் சுமார் 25 நாடாளுமன்ற பிரதிநிதிகளும் 1000க்கு மேற்பட்ட மாகாண சபை, மாநகர சபை, நகரசபை, பிரதேச சபை போன்ற அரசியல் அதிகார உறுப்பினர்களை நாடு பூராகவுமிருந்து பெற்றுவந்துள்ளது. இன்றும் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இது இக்கட்சியில் வரலாற்றுச் சம்பவும் சரித்திரமும் சாதனையுமாகும். அத்துடன் உத்தியோகம், உயர் தொழில், துறைமுகம், பல்கலைக்கழகம், அரச, தனியார் நிறுவனம் என்று பல்லாயிரம் பேர் இவர்கள் எல்லோருக்கும் இந்த முஸ்லிம் காங்கிரஸ் தான் மூலதனம். அவர்களின் அடித்தளமும் அத்திவாரத்தின் அடிக்கல்லும் அந்த சீதேவிதான். சுபஹானல்லாஹ்!
இது போன்ற எண்ணற்ற தடைகளையும் தாண்டித்தான் அவைகளை நாம் கடந்து வந்துள்ளோம். நாங்கள் பெற்ற அப்போதைய வலிகளின் வேதனைகளையும் இப்போதைய இந்த ‘முஸ்லிம்’ அரசியல்வாதிகள் எத்தனை பேருக்குத்தான் தெரியும் என்பது எனக்கு என்னவோ இன்னும் சந்தேகம்தான்.
அந்த முஸ்லிம் என்ற சொல் அன்று நீக்கப்பட்டிருந்தால் இன்றுள்ள இவர்களில் பலர் நாடாளுமன்ற கதிரைகளைக் கண்டிருப்பார்களா என்று அண்மையில் வெளியான இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்று ஆய்வுப் புத்தகத்தில் அந்த ஆய்வின் ஆசிரியர் குறிப்பிட்டு எழுதியுள்ளதை இத்தருணத்தில் இங்கு தொட்டுக்காட்ட விருப்புகிறேன்.
கடந்த 33 ஆண்டுகளாக முஸ்லிம் அரசியல் விடுதலைப் போராட்டதில் இன்றுவரையும் இக்கட்சியுடன் என்னை இணைத்துக் கொண்டு இடைவிடாது இம்மண்ணின் மேல் தொடர்ந்து பயணிக்கும் ஒரே ஒரு முஸ்லிம் காங்கிரஸின் மூத்த முதல்வன் இவன் மட்டும்தான். வேறு எவரும் எம்மத்தியில் இன்று இல்லை. அல்ஹம்துல்லாஹ்!
Gafoor

திங்கள், 11 பிப்ரவரி, 2013

எரிபொருள் மானியம் வழங்கு; இல்லையேல் வேலை நிறுத்தம்; 15 ஆம் திகதி வரை அரசுக்கு காலக்கெடு!


PBus

 (எம்.பைஷல் இஸ்மாயில்)
அரசாங்கம் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்பாக எரிபொருள் மானியம் வழங்காதுவிடின் நாடாளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
பஸ் கட்டண உயர்வுக்குப் பதிலாக அரசாங்கம் தமக்கு எரிபொருள் மானியம் தருவதையே தாம் விரும்புவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் 14 ஆம் திகதி பஸ் கட்டணங்ளை உயர்த்த அனுமதிப்பதாக அதிகாரம் வாய்ந்தவர்கள் கூறியிருந்தனர். ஆனால் இப்போது அதைச் செய்ய மறுத்து தமது வாக்குறுதியை மீறியுள்ளனர்.
இப்போது அவர்கள் இந்த விடயத்தை பற்றிப் பேசுவதை தவிர்த்து வருகின்றனர். எமக்கு நிதிவடிவில் அல்லது எரிபொருள் வடிவில் உதவி வழங்குவது அவசியம்.
இதில் ஏதோவொன்றை அரசாங்கம் தர மறுக்குமாயின் முன்னறிவித்தலின்றி பஸ் வேலை நிறுத்தத்தை தொடங்குவோம். தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சேவையிலுள்ள சுமார் 20 ஆயிரம் பஸ்களில் 16 ஆயிரம் பஸ்கள் தனியாருக்கு உரியவை. 4 ஆயிரம் பஸ்களை மட்டும் சேவையிலீடுபடுத்த இலங்கை போக்வரத்து சபைக்கு தேசிய போக்குவரத்து ஆணையகமும் தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சும் 280 இலட்சம் ரூபா உதவியை வழங்கியுள்ளன. ஆனால் எமக்கு இந்த உதவி கிடைப்பதில்லை. என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
லஞ்சத்தின் அடிப்படையில் சட்டத்தை மீறி பஸ் அனுமதிகள் வழங்கப்படுவதால் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ரூபா நஷ்டம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

எம்மீது கை வைத்தால் இஸ்ரேலை சுக்குநூறாக்கி விடுவோம்; ஈரான் ஜனாதிபதி சூளுரை!


images

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை முற்றிலுமாக அழித்து விடுவோம் என  ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமடட் நஜாட் சூளுரைத்துள்ளார்.
இஸ்லாமிய கூட்டுறவு நாடுகளின் மாநாடு எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள ஈரான் ஜனாதிபதி எகிப்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் நினைத்துக் கொண்டுள்ளது.
அப்படி தாக்குதல் நடத்தினால் ஈரானின் பதிலடி எப்படி இருக்குமோ? எதிர் விளைவு என்ன ஆகுமோ? என்ற அச்சத்திலும் இஸ்ரேல் உள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை தரைமட்டமாக்கி அழித்து விடுவோம். என நஜாத் குறிப்பிட்டுள்ளார்.

site counter