அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 27 ஜூன், 2013

தொழிற்பயிற்சி கற்கைகளுக்கு அம்பாறை மாவட்டத்தில் விண்ணப்பங்கள் கோரல் விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் 30

தொழிற்பயிற்சி கற்கைகளுக்கு அம்பாறை மாவட்டத்தில் விண்ணப்பங்கள் கோரல்விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் 30

(ஏ.எல்.நிப்றாஸ்)
அம்பாறை மாவட்டத்தில் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2013ஆம் ஆண்டின் இரண்டாம் தொகுதி பயிற்சிநெறிகளுக்காக இளைஞர், யவதிகளிடமிருந்து தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள 16 தொழிற்பயிற்சி பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படும் 47 பயிற்சிநெறிகளுக்கு இம்மாதம் 30ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் தமிழ்பேசும் பிரதேசங்களில் அமைந்துள்ள

நிந்தவூர் (மாவட்ட) தொழிற்பயிற்சி வளாகத்தினால் வழங்கப்படும் தையல் மற்றும் சாரதிப் பயிற்சி பயிற்சிகளுக்கும்,

சம்மாந்துறை தொ.ப.நிலையத்தின்
வாகன திருத்துனர்,
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ்,
மோட்டார் வைண்டிங்,
ஆடைதொழிற்சாலை தரக் கட்டுப்பாட்டாளர், அதிவேக தையல் இயந்திர இயக்குனர்,
பேக்கரி தொழில்நுட்பம்,
கணினி பகுதி நேர வகுப்புக்கள் போன்ற பயிற்சிகளுக்கும்

மத்திய முகாம் நிலையத்தினால் வழங்கப்படுகின்ற நிர்மாண கைவினைஞர், நீர்க்குழாய் பொருத்துனர், வீட்டு மின்னிணைப்பாளர், தையல், ஒட்டுவேலை செய்பவர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், முச்சக்கரவண்டி திருத்துனர் பயிற்சிநெறிகளுக்கும் பொத்துவில் தொ.ப.நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், சமையல் கலைஞர், உணவு விடுதி, வீட்டு மின்னிணைப்பாளர், அறை பராமரிப்பாளர், மர கைவினைஞர், ஆகிய கற்கைகளுக்கும் காரைதீவு பயிற்சி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், நீர்க்குழாய் பொருத்துனர், அலுமீனியம் பொருத்துனர், நிர்மாண கைவினைஞர் ஆகிய கற்கைகளுக்கும் அக்கரைப்பற்று நிலையத்தினால் வழங்கப்படும் மோட்டர் வைண்டிங், வீட்டு மின்னிணைப்பாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் மற்றும் மர பூச்செதுக்குனர் கற்கைநெறிகளுக்கும்
சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், வீட்டு மின்னிணைப்பாளர் பயிற்சிகளுக்கும் இறக்காமம் மற்றும் ஆலையடிவேம்பு பயிற்சி நிலையங்களால் வழங்கப்படும் மர கைவினைஞர் கற்கைநெறிக்கும் கல்முனை பயிற்சி நிலையத்தின் நீர்;க் குழாய் பொருத்துனர் பயிற்சிக்கும் இப்போது விண்ணப்பிக்கலாம்.
இதேவேளை, சிங்கள மொழிமூலத்தில் பயிற்சிகளை வழங்கும் அம்பாறை தொழிற்பயிற்சி நிலையம், அம்பாறை விஷேட தொ.ப.நிலையம் மற்றும் தெகியத்தக்கண்டிய, தமண, மகா ஓயா, வீரகொட பிரதேசங்களிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படுகின்ற கற்கைகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தேசிய தொழில்சார் தகமை (என்.வி.கியு,) மட்டம் 3 மற்றும் 4 அடிப்படையிலான இப் பயிற்சிநெறிகள் அனைத்தும் முழுநேரமாக இடம்பெறும் என்பதுடன் சில கற்கைநெறிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு மற்றும் போக்குவரத்திற்கான பருவகாலச் சீட்டு போன்றன பயிலுனர்களுக்கு வழங்கப்படும். இவற்றில் அதிகமான கற்கைகளுக்கு குறைந்தபட்சம் தரம்-9 சித்தியடைந்த எந்தவொரு இளைஞர் யுவதியும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 19 ஜூன், 2013

நிந்தவூர் அல்-அஸ்றக் தேசிய பாடசாலையின் உயர்தர மாணவனும், அகில இலங்கை பாடசாலை மட்ட முப்பாய்ச்சல் போட்டியில் தங்கப் பதக்கத்தினையும் பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்துத் தந்த எம்.எஸ்.எம்.நுஸ்கி அவர்கள் காலமானார்.

நிந்தவூர் அல்-அஸ்றக் தேசிய பாடசாலையின் உயர்தர மாணவனும், அகில இலங்கை பாடசாலை மட்ட முப்பாய்ச்சல் போட்டியில் தங்கப் பதக்கத்தினையும் பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்துத் தந்த எம்.எஸ்.எம்.நுஸ்கி அவர்கள் நேற்று மாலை 5 மணியளவில் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமானார்.

இவர் கடந்த 2011 19 வயதிற்குட்டபட்ட அகிலஇலங்கை முப்பாய்ச்சல் போட்டியில் தங்கப்பதக்கத்தையும், 2012 21 வயதிற்குட்பட்ட மாகாண மட்டப்போட்டியில் 3 தங்கப்பதக்கங்களைப் பெற்று சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது மாத்திரமல்லாமல் அதே வருட அகில இலங்கைப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வெண்று இப்பிராந்தியத்திற்கே பெருமை சேர்த்துத் தந்துள்ளார்.

-M.H.M.Hasheer-






வெள்ளி, 14 ஜூன், 2013

35 வருட கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற இரு ஆசிரியைகளுக்கு நிந்தவூர் மதீனாவில் பாராட்டு.

35 வருட கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற இரு ஆசிரியைகளுக்கு நிந்தவூர் மதீனாவில் பாராட்டு.

           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

சுமார் 35 வருடங்கள் ஆசிரிய சேவையில் அரும்பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற திருமதி.சுபைறா அலியார், திருமதி.முனீறா பதுறுதீன் ஆகியோரைப் பாராட்டி கௌரவிக்கும் விழா நேற்று (13-06-2013) நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
வித்தியாலய பிரதி அதிபர் எம்.எச்.எம்.அப்துல் பதியூ தலைமையில் நடை பெற்ற இவ்விழாவில் ஓய்வு பெற்ற அதிபர், கலாபூசனம் திருமதி.எம்.செயினுலாப்தீன் பிரதம அதிதியாகவும், வித்தியாலய அதிபர் இரத்தின தீபம்.எஸ்.அகமது கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த இரண்டு ஆசிரியர்களின் சேவைகளைப் பாராட்டி வாழ்துப் பத்திரங்கள் வாசித்து கையளிக்கப்பட்டதோடு, பொன்னாடைகளும் போற்றி கௌரவிக்கப்பட்டன. மேலும்,  பெறுமதி வாய்ந்த பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதே வேளை இவ்வாசிரியர்களால் கற்பிக்கப்பட்ட மாணவர்களும் இரு ஆசிரியர்களுக்கும் மலர் மாலை அணிவித்து, பல்வேறு விதமான பரிசில்களை வழங்கி கௌரவித்தனர்.
இவ்விழாவில் மாணவர்களின் பல்வேறு கலை,கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.









வியாழன், 13 ஜூன், 2013

உலக சுற்றாடல் தினம் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில் சிறப்பாக இடம் பெற்றது. பிரதம அதிதியாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரி எம்.ஐ.இஷாக்.

உலக சுற்றாடல் தினம்
நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில் சிறப்பாக இடம் பெற்றது.
பிரதம அதிதியாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரி எம்.ஐ.இஷாக்.

           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)

உலக சுற்றாடல் தினம் நேற்று (12) நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கல்லூரி அதிபர் திருமதி.என்.யூ.ஹானியா சித்தீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சிரேஷ்ட சுற்றாடல் அதிகாரி மௌலவி.எம்.ஐ.இஷாக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வுகளில் நிந்தவூர்க் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம், பிரதேச சுற்றாடல் அதிகாரி அலி ஹசன், வலய சுற்றாடல் அதிகாரியும்,அம்பாரை மாவட்ட சுற்றாடல் முன்னேற்ற ஆலோசகருமான எம்.ரி.நௌபல் அலி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'சிந்தி, உணவருந்து, சேமி' எனும் இவ்வருட சுற்றாடல் தின மகுட வாசகத்தின் கீழ் மாணவர்கள் எவ்வாறு சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டும்? அவ்வாறு பாதுகாப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன?, பாதுகாக்கா விட்டால் நாமனைவரும் அடையும் துன்பங்கள் என்ன? பிறருக்குத் துன்பம் ஏற்படாமல் எவ்வாறு சுற்றாடலைப் பாதுகாக்கலாம் போன்ற பல விதமான ஆலோசனைகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

சுற்றாடல் கழக மாணவர்களுக்குச் சின்னஞ் சூட்டலும், திறமை காட்டிய மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கலும் இடம் பெற்றதோடு, மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இறுதியில் ' சுற்றாடலைப் பாதுகாப்போம்.சுகமாக வாழ்வோம்' எனும் தொனிப் பொருளிலான மாணவ,ஆசிரிய ஊர்வலம் ஒன்றும் இடம் பெற்றது.







புதன், 12 ஜூன், 2013

தொ.ப.அதிகார சபையின் மாதாந்த கூட்டம்

தொ.ப.அதிகார சபையின் மாதாந்த கூட்டம்



இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் மாதாந்த கூட்டம் நேற்று (11-06-2013)(செவ்வாய்க்கிழமை) நிந்தவூரில் அமைந்துள்ள மாவட்ட தொழிற்பயிற்சி வளாகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.ஏ. ஜாபீர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பயிற்சி உத்தியோகத்தர் எஸ்.எம்.ஏ.பஸீது மற்றும் 60 இற்கு மேற்பட்ட போதனாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கடந்த மாதத்தின் முன்னேற்ற அறிக்கை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட அதேவேளை, ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள இரண்டாம் அரையாண்டு பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது.

புதிததாக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறைகள் குறித்து உதவிப் பணிப்பாளர் விளக்கமளித்தார்.

ஏ.எல்.நிப்றாஸ்
ஊடக பொறுப்பாளர்




வியாழன், 6 ஜூன், 2013

நிந்தவூர் றியல் இம்றானின் துரித வளர்சியில் மற்றுமோர் மென்பந்து கிரிகெற் சுற்றுப் போட்டி!

நிந்தவூர் றியல் இம்றானின் துரித வளர்சியில் மற்றுமோர் மென்பந்து கிரிகெற் சுற்றுப் போட்டி!


 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நிந்தவூர் றியல் இம்ரான் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 7இ 8 இ9 ம் திகதிகளில் நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

றியல் இம்ரான் சம்பியன் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியாக நடைபெறவுள்ள இத்தொடரில் வெற்றி பெறுகின்ற அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 10இ000 ரூபா பணமும் வழங்கப்படும். அதேபோன்று இரண்டாமிடம் பெறும் அணிக்கு கிண்ணத்துடன் 5000 ரூபா பணமும் வழங்கப்படவுள்ளது.

தொடரின் சிறப்பாட்டக்காரர்இ சிறந்த பந்துவீச்சாளர்இ இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரர் என பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும் றியல் இம்ரான் விளையாட்டுக் கழக கிரிக்கெட் அணித் தலைவர் எஸ்.எம்.ஆரிப் தெரிவித்தார்.

இச்சுற்றுப்போட்டியில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த கழகங்கள் பங்கு பற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. றியல் இம்ரான் விளையாட்டுக் கழகம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கழகமாகும். இக்கழகம் இம்ரான் விளையாட்டுக் கழகத்திலிருந்து முரண்பட்டு வெளியேறிய வீரர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கழகமாகும்.

ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் அம்பாரை மாவட்டத்தில் பல சுற்றுப்போட்டிகளி;ல் கலந்து கொண்டு கிண்ணங்களைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 


உலக சுற்றாடல் தினம் நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியிலும் சிறப்பாக இடம் பெற்றது. பிரதம அதிதியாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரி எம்.ஐ.இஷாக்.

உலக சுற்றாடல் தினம்
நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியிலும் சிறப்பாக இடம் பெற்றது.
பிரதம அதிதியாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரி எம்.ஐ.இஷாக்.

           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)

உலக சுற்றாடல் தினம் இன்று (05) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய கல்லூரியிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கல்லூரி அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சிரேஷ்ட சுற்றாடல் அதிகாரி மௌலவி.எம்.ஐ.இஷாக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வுகளில் நிந்தவூர்க் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம், பிரதேச சுற்றாடல் அதிகாரி அலி ஹசன், வலய சுற்றாடல் அதிகாரியும்,அம்பாரை மாவட்ட சுற்றாடல் முன்னேற்ற ஆலோசகருமான எம்.ரி.நௌபல் அலி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'சிந்தி, உணவருந்து, சேமி' எனும் இவ்வருட சுற்றாடல் தின மகுட வாசகத்தின் கீழ் மாணவர்கள் எவ்வாறு சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டும்? அவ்வாறு பாதுகாப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன?, பாதுகாக்கா விட்டால் நாமனைவரும் அடையும் துன்பங்கள் என்ன? பிறருக்குத் துன்பம் ஏற்படாமல் எவ்வாறு சுற்றாடலைப் பாதுகாக்கலாம் போன்ற பல விதமான ஆலோசனைகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

இறுதியில் ' சுற்றாடலைப் பாதுகாப்போம்.சுகமாக வாழ்வோம்' எனும் தொனிப் பொருளிலான மாணவ,ஆசிரிய ஊர்வலம் ஒன்றும் இடம் பெற்றது.







செவ்வாய், 4 ஜூன், 2013

பொய்யான செய்தியை வெளியிட்டு, தனக்குக் களங்கம் ஏற்படுத்திய பத்திரிகை மீது ருபா 500 மில்லியன் கோரி வழக்குத் தாக்கல். -மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் களத்தில் -

பொய்யான செய்தியை வெளியிட்டு, தனக்குக் களங்கம் ஏற்படுத்திய பத்திரிகை மீது ருபா 500 மில்லியன் கோரி வழக்குத் தாக்கல்.
                -மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் களத்தில் -
            ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )


சுடர்ஒளி பத்திரிகை நிறுவனம் புதிதாக வெளியிடுகின்ற முஸ்லிம் முரசு வாராந்த பத்தரிகை தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர்இ 500 மில்லியன் ரூபா மானநஷ்டஈடு கோரியுள்ளார்.

இப்பத்திரிகை பொய்யான தகவல்களை வெளியிட்டு தனது கௌரவத்திற்கும்இ மானத்திற்கும் பங்கமேற்படுத்தியுள்ளது. இதனால் குறிப்பிட்ட பத்தரிகை ரூபா 500 மில்லியன் ரூபாவை தனக்கு நஸ்டஈடாகத் தர வேண்டுமென்று கோரி தனது சட்டத்தரணி மூலம் மாகாண அமைச்சர் எம்.எம்.மன்சூர் சார்பில் கடிதம் (டுநவவநச னுநஅயனெ)) ஒன்று குறிப்பிட்ட பத்திரிகை நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

திருமலையில் பிரதி அமைச்சர் ஒருவரின் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மன்சூர் மது போதையில் இருந்ததாகவும் அங்கு பெரும் ரகளையில் ஈடுபட்டதாகவும் அவரது பெயரை மறைமுகமாக தெரிவித்து இப்பத்திரிகை தனது முதலாவது இதழில் (2013ஃ05ஃ15) தகவல் வெளியிட்டிருந்தது.

இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டே தனது சட்டத்தரணி மூலம் தான் இந்த (டுநவவநச னுநஅயனெ) மனுவை அனுப்பியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

திங்கள், 3 ஜூன், 2013

நிந்தவூர் அல்-அஷ்றக் மைதானத்தில் கல்முனை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள். -கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிறல் மொஹான் விஜயவிக்கிரம பிரதம அதிதி.-

நிந்தவூர் அல்-அஷ்றக் மைதானத்தில்
கல்முனை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள்.
-கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிறல் மொஹான் விஜயவிக்கிரம பிரதம அதிதி.-
         ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
கல்முனைக் கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளும், பரிசளிப்பு விழாவும் கடந்த (30ந் திகதி ) நிந்தவூர் அல்- அஷ்றக் தேசியக் கல்லூரி மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிறல் மொஹான் விஜயவிக்கிரம பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
மேலும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் புஸ்பகுமார, மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன், நிந்தவூர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் வை.எல்.சுலைமாலெவ்வை, கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம்  ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விளையாட்டு விழாவில் கல்முனை வலயத்திலுள்ள நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை தமிழ் பிரிவு, கல்முனை முஸ்லிம் பிரிவு ஆகிய ஐந்து கோட்டங்களிலுமுள்ள 63 பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், கோட்டக் கல்வி அதிகாரிகள், கல்விப் பணிப்பாளர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.
மாணவர்களின் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளுடன், அணிவகுப்பு மரியாதை, பேண்ட் வாத்தியங்கள், உடற்பயிற்சி கண்காட்சிகள் என்பனவும் இடம் பெற்றன.
போட்டி முடிவுகளின்படி சகல போட்டிகளிலும் கல்முனை தமிழ் பிரிவுக் கோட்டம் முதலாம் இடத்தையும், நிந்தவூர்க் கோட்டம் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கு உரையாற்றிய பிரதம அதிதி றியர் அட்மிறல் மொஹான் விஜயவிக்கிரம 'இப்பிரதேச மக்கள் கல்வியிலும்,விளையாட்டிலும் மட்டுமல்லாது சிறப்பான அரசியல் ஞானமுடையவர்கள் என்பதையும் நான் அறிவேன்.இவை யாவற்றிலும்  முன்னேறிச் செல்ல சமாதானத்தைப் பெற்றுத் தந்தவர்களுக்கு நாம் என்றும் நன்றியுடன் இருக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.  







site counter