அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 10 செப்டம்பர், 2012

கிழக்கு மாகாண சபை ஆட்சி அதிகாரம்?; கட்சிகளிடையே பேச்சுவார்த்தை


கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்படாமல் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கிழக்கு மாகாண சபைக்காக போட்டியிட்ட கடசிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

மொத்தமாக கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டு போனஸ் ஆசனங்களுடன் 14 ஆசனங்களைக் கைப்பற்றியது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்த மாகாண சபையில் 11 ஆசனங்களை தம்வசப்படுத்தியுள்ளது.

இது தவிர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏழு ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி நான்கு ஆசனங்களையும் தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தையும் கிழக்கு மாகாண சபையில் கைப்பற்றியுள்ளன.

இதற்கமைய கிழக்கு மாகாண சபையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு எந்தவொரு கட்சியும் அறுதிப் பெறுபான்மையை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter