நிந்தவூர் பிரதேச
ஓய்வூதியர்களின் வருடாந்த ஒன்று கூடலும், சர்வதேச மகளீர் தினமும்.
(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
நிந்தவூர் பிரதேச அரச சேவை ஓய்வூதியர்களின் வருடாந்த ஒன்று கூடலும், சர்வதேச மகளீர் தினமும் நேற்று நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச சங்கத் தலைவர் ஏ.எல்.எம்.பஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.இஸ்ஸதீன், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபீக், அம்பாரை மாவட்ட சங்க உபதலைவர் எஸ்.செல்லத்துரை, முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அமீன், பிரதேச செயலக கணக்காளர் ஏ.ஆர்.எம்.நிசாம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
மேலும் அமானா வங்கி நிந்தவூர் கிளை முகாமையாளர் ஏ.எல்.முபாறக், அப்துல் அஸீஸ் கொன்;செக்ஷன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஏ.முஹம்மட் ஹில்மி, ஓய்வூதிய சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் ஏ.பைஷால், ஓய்வூதிய அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.தாஹீர் சாஜிதா ஆகியோர் சிறப்பதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், அரச ஓய்வூதியம் பெறும் நூற்றுக் கணக்கான ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொண்டனர்.
சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல், கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் அதிவிசேட சித்தி (3ஏ) பெற்ற மாணவிகளும், சில சமூக சேவகர்களும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.
பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா அப்துல் ஜலீல் இங்கு உரை நிகழ்துகையில்:- 'இங்கு உள்ளவர்கள் யாரும் ஓய்வுபெறவில்லை. அரச சுற்று நிருபத்திற்கமைய 60 வயதில் பணியை முடித்துக் கொண்டோமே தவிர, வேறு எந்த விடயத்திலும் நீங்கள் சளைத்தவர்களில்லை என்பதை நிருபித்துக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் நாம் மறணிக்கும் போதுதான் ஓய்வு பெறுகிறோம். நம் எல்லோருக்கும் மறணிக்கும் வரை பொதுப் பணி செய்ய இறைவன் அருள்புரிய வேண்டுமெனப் பிரார்த்திப்போம். இதே வேளை சர்வதேச மகளீர் தினமான இன்று முதல் கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் பாத்திமா வழியில் நடப்பதன் மூலம் உலகப் பெண்களின் உரிமைகள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என்ற உண்மையை விளங்கிச் செயற்பட நாமனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும்' எனத் தெரிவித்தார்.
இறுதியில் சங்கைக்குரிய உலமா ஹஸ்புல்லா மௌலவி அவர்களினால் நாட்டிற்கும், மக்களுக்கும், ஜனாதிபதியிற்கும் நல்லாசி வேண்டி துவாப் பிராத்தனை ஒன்றும் இடம் பெற்றது.
.jpg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக